Gistak Media – Cinema News | Trending News | Latest News

Tamil Nadu Electricity Board Jobs 2024 : 500 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் Tamil Nadu Generation And Distribution Corporation (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது (Tamil Nadu Electricity Board Jobs 2024) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Tamil Nadu Electricity Board Jobs 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • Electrical And Electronics Engineering – 395
  • Mechanical Engineering – 50
  • Civil Engineering – 15
  • Computer Engineering/ Information Technology – 9
  • Electronics and Instrumentation Engineering – 9
  • Electronics and Communication Engineering – 22
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Diploma In Engineering/Technology முடித்திருக்க வேண்டும்.

  2. சம்பளம் (Salary) : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இந்த Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் ஊக்கத்தொகை ரூ.8,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு டிப்ளமோ பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு (Tamil Nadu Electricity Board Jobs 2024) https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே இணையதளத்தில் தேடுதல் பக்கத்தில் TANGEDCO என்ற பிரிவில்  விண்ணப்பிக்க வேண்டும்.

  5. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.02.2024 ஆகும்.

  6. மேலும் விவரங்களுக்கு :
    http://boat-srp.com/wp-content/uploads/2024/02/TANGEDCO_Notification_updated.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top