ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக சேர்ந்து நடத்தும் தாக்குதலின் தாக்கத்தால் (Tamil Nadu Fuel Crisis News) இந்தியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் 8 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
கூடுதல் மின்சார நுகர்விற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்
LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்கள், டீக்கடைகள், Cloud Kitchen உள்ளிட்ட உணவு உற்பத்தித் தொழிற்கூடங்களின் கூடுதல் மின்சார நுகர்விற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் ஆனது வழங்கப்படும். புதியதாக LPG-இலிருந்து எலக்ட்ரிக் ஸ்டவ்/இண்டக்ஷன் மாற்றும் உணவகங்கள், ஹோட்டல்கள், கிளவுட் கிச்சன்கள் ஆகியவை.
மாற்று எரிபொருள்கள் பயன்படுத்த அனுமதி
LPG பயன்படுத்தி வரும் தொழில்கள் LPG மீது முழுமையாக சார்ந்திருப்பதை குறைக்க மாற்று எரிபொருட்களை பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மண்ணெண்ணெய், பயோமாஸ் மற்றும் மின்சார அடுப்புகள் போன்ற எரிபொருட்களின் (Tamil Nadu Fuel Crisis News) மாற்றத்திற்காக புதிய அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் போதுமானது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு
LPG இல்லையெனில் சமையல் சிக்கல் அதிகம் ஏற்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு.
பால் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு (Tamil Nadu Fuel Crisis News)
இந்த இடர்ப்பாட்டினால் ஒரு நாளில் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்கள் (Tamil Nadu Fuel Crisis News) கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள உத்தரவு. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உணர்வை பெறுவர்.
விவசாயிகளுக்கு வருமான குறைவு ஏற்படாமல் பாதுகாப்பு
இந்த இடர்ப்பாட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மற்றும் விவசாயிகளுக்கு வருமான பாதுகாப்பு அளிக்க காய்கறிகள் மற்றும் பழங்களை (Tamil Nadu Fuel Crisis News) விவசாயிகள் 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
எரிவாயு விநியோகம் சரியாக நடைபெற கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
தமிழக அரசு மாநில அளவில் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி எரிவாயு விநியோகம் சரியாக நடைபெற கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
தேவையான LPG கையிருப்பு உள்ளது
தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான LPG கையிருப்பு உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை பற்றி கவலை வேண்டாம்.
பேருந்து சேவைகள் வழக்கம் போல தொடரும்
தேவையான டீசல் கையிருப்பு உள்ளதால் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பேருந்து சேவைகள் ஆனது வழக்கம் போல தொடரும்.