-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Tamil Nadu Medical Sector Recruitment: தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்செர்ப்பு தளமான TNMRB – இல் மருத்துவ உதவியாளருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Medical Sector Recruitment பணியிட விவரம்
* பதவியின் பெயர்: மருத்துவ உதவியாளர்
* மொத்த காலியிடங்கள்: 67
இந்த பதவிக்கு 36 ஆண்களும், 31 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இரண்டரை வருட நேரடி வகுப்பில் மருத்துவ உதவியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை வழங்கப்படும்.
Tamil Nadu Medical Sector Recruitment விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://mrbonline.in/ என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
* பொது பிரிவினர் – ரூ.600/-
* SC/ ST பிரிவினர் – ரூ.300/-
தேர்வு முறை:
படிப்பு, மதிப்பெண் மற்றும் அனுபவத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 10, 2023.








