Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட குற்றம் தொடர்பான புகாராக இருந்தாலும் இனி எந்த காவல் நிலையத்திலும் (Tamil Nadu Police FIR Complaint) புகார்களை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு குற்றவியல் நடைமுறை விதிகள் 2025-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் புகார் அளிக்க முடியும்.
குற்றவியல் நடைமுறை விதிகள் (Tamil Nadu Police FIR Complaint)
காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட குற்றம் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டதும், முதல் தகவல் அறிக்கை (FIR) 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்ற நவீன தொழில்நுட்பத்துடன் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக டிஜிட்டல் முறையில் சம்மன் அனுப்புதல், சாட்சிகளை பதிவு செய்ய இ-சாக்ஷ்யா (eSakshya) செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றவியல் நடைமுறை விதிகள் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றவாளிகளை விரைவாகவும், திறம்படவும் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகநீதி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்கிறது. இந்த குற்றவியல் நடைமுறை விதிகள் 2025-ன் அமலாக்கம் மாநிலம் முழுவதும், காவல்துறையின் செயல்பாடுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய விதிகள் மூலம் குற்றங்கள் குறித்த புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
எப்படி செயல்படும்
இந்த குற்றவியல் நடைமுறை விதிகளின்படி, ஒரு காவல் நிலையம் தனது அதிகார எல்லைக்கு வெளியே நடந்த குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு (Tamil Nadu Police FIR Complaint) செய்யப்பட்ட எப்ஐஆர்-ஐ 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு, நேரில் அல்லது மின்னணு முறையில் அனுப்ப வேண்டும். இந்த விதிகள், ஒன்றிய அரசின் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) உடன் இணைந்து மாநிலத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றவியல் நடைமுறை விதிகள் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில் ‘இந்த குற்றவியல் விதிகள் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் சீரான நடைமுறையை உறுதி செய்வதோடு, குற்றவியல் நடைமுறை நிர்வாகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும். மேலும் நீதித்துறை ஒருங்கிணைப்பு, குற்றவியல் சட்ட அமலாக்கம், நடைமுறை சீர்திருத்தங்கள் என மாநிலம் முழுவதும் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!