Gistak Media

Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் ‘தமிழ்ப் புத்தாண்டு’ சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மிக முக்கியமாக கொண்டாடப்படும் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு திருநாள் (Tamil New Year 2026) ஆகும். தமிழ் மாதமான சித்திரையின் முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு திருநாள்  ஆனது தமிழ்  ‘வருஷப் பிறப்பு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த 2026-ஆம் ஆண்டில், தமிழ்ப் புத்தாண்டு ஆனது வரும் ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை அன்று  ‘பராபவ’ வருடமாகப் பிறக்கின்றது.

தமிழ்ப் புத்தாண்டின் வரலாற்று முக்கியத்துவம்

இந்த தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் பண்டைய தமிழ் கலாச்சாரம் ஆனது வானியல் சாஸ்திரத்துடன் ஆழமான தொடர்பு உடையது. வானியல் சாஸ்திரத்தில் சூரியன் தனது சுழற்சியில் மேஷ ராசிக்குள் நுழையும் காலத்தையே புத்தாண்டாகக் குறிக்கிறது. இது இயற்கையில் நிகழும் ஒரு மாற்றம் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தை அறிவிக்கிறது. இது வரப்போகும் வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் நிகழ்வாக திகழ்கிறது.  இந்த நிகழ்வை தொடர்ந்து மரங்களில் பூக்கள் பூக்கும், மற்றும் இலைகள் துளிர்க்கும். விவசாய மக்கள் தங்கள் நிலங்களில் புதிய விதைகளை விதைக்கத் தொடங்கும் நாளாகவும், மற்றும் அறுவடை போன்ற புதிய தொடக்கத்திற்கான அடையாளமாகவும் இந்தப் பண்டிகை திகழ்கிறது. சங்க இலக்கிய குறிப்புகளில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்ட சிறப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

Tamil New Year 2026 - GISTAK media

தமிழ் கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள்

(Tamil New Year 2026) புத்தாண்டு தினத்தின்  முந்திய நாள் இரவே ஒரு தாம்பூலத் தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, தங்கம், வெள்ளி நாணயங்கள், பூக்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றை வைத்து பூஜையறையில்  சாமியின் முன் வைத்து விடுவார்கள்.  புத்தாண்டு தினத்தன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததும் பூஜையறையில்  சாமியின் முன் வைத்துள்ள  தட்டில் உள்ள மங்கலப் பொருட்களைப் பார்ப்பார்கள். இப்படி மங்கலப் பொருட்களைப் பார்ப்பது அந்த ஆண்டு முழுவதும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது தொன்று தொட்டு வரும் ஐதீகம் ஆகும். இந்த  வழிபாட்டு முறை  ‘கனி காணுதல்’  என்று அழைக்கப்படுகிறது.  மேலும் இந்த நாள் மகாலட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜை செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது.

Tamil New Year 2026 : தமிழ்ப் புத்தாண்டு உணவு முறையும் அதன் தத்துவமும்

தமிழ்ப் புத்தாண்டு அன்று பிரத்யேகமாக வேப்பம்பூ பச்சடி தயாரிக்கப்படுகிறது. இந்த வேப்பம்பூ பச்சடியில் கசப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் கலந்திருக்கும்.   மக்கள் தங்கள் வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சியான நிகழ்வுகள்  (இனிப்பு), சவால்கள் அல்லது கசப்பான அனுபவங்கள் (கசப்பு), மற்றும் பிற ஏற்ற இறக்கங்களைச் சமமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்த வேப்பம்பூ பச்சடி உணவு முறை உணர்த்துகிறது. மேலும் இந்த வேப்பம்பூ பச்சடியானது நல்ல ஆரோக்கியத்தையும், மற்றும் மனவலிமையையும் தருவதாக நம்பப்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top