TATA Won IPL Sponsorship : 5 ஆண்டுகளுக்கு IPL தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றது TATA
மார்ச் 22 ஆம் தேதி IPL கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது :
இன்னும் 2 மாதங்களில் 17 வது சீசனுக்கான IPL கிரிக்கெட் தொடர் ஆனது தொடங்கவுள்ளது. 2023 டிசம்பர் மாதம் ஏற்கனவே மினி ஏலம் முடிவடைந்த நிலையில், மார்ச் 22ஆம் தேதி IPL கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி ஆனது அறிவித்த பின்னரே, IPL கிரிக்கெட் அட்டவணையை வெளியிட IPL நிர்வாகம் ஆனது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அணி நிர்வாகங்கள் மார்ச் முதல் வாரம் முதலே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஜூன் 1 ஆம் தேதி T20 உலகக்கோப்பை தொடர் ஆனது நடக்கவுள்ளதால், மே மாதத்தின் 2வது வாரத்திலேயே IPL இறுதிப்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் IPL தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை BCCI முடித்துள்ளது. சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான விவோ ஆனது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற IPL டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை வென்றது. அந்த ஒப்பந்தம் ஆனது 5 ஆண்டுகளுக்கு ரூ.2199 கோடிக்கு முடிவடைந்தது. ஆனால் இந்தியா – சீனா இடையிலான வேறுபட்ட உறவு காரணமாக, விவோ உடனான ஒப்பந்தத்தை IPL நிர்வாகம் ஆனது முறித்து கொண்டது. அதனால் கடந்த இரு சீசன்களின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஆனது ஒப்பந்தம் செய்யப்பட்டது. TATA நிறுவனம் ஆண்டுக்கு ரூ.365 கோடி கொடுக்க (TATA Won IPL Sponsorship) முன்வந்தது.
TATA Won IPL Sponsorship - ஐபிஎல் தொடரால் BCCI-க்கு கொட்டும் பணம் :
இந்த காலக்கட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சஷிப் டெண்டர் 2023 டிசம்சர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. IPL நிர்வாக குழு ஆனது இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முன்தொகையுடன் விண்ணப்பிக்க அறிவித்தது. இந்த நிலையில் ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனம் திடீரென இதில் உள்ளே வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.2500 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனம் கூறியது. இதைத்தொடர்ந்து IPL நிர்வாக குழு ஆனது டாடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. TATA நிறுவனம், “We Are Ready To Match The Same Amount Rs.2500 Crore ” என ஒப்புக் கொண்டதால் இறுதியாக IPL டைட்டில் ஸ்பான்சரை (TATA Won IPL Sponsorship) மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது (டாடா நிறுவனமும் 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி ஒப்புக் கொண்டது).
IPL நிர்வாகம் இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே BCCI-க்கு ஒளிபரப்பு உரிமை பிரிந்ததன் காரணமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிக வருமானம் கிடைத்தது. தற்போது டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தமும் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால், IPL தொடரின் மதிப்பு மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரால் ரூ.2,500 கோடி வருமானம் பார்த்தது BCCI.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!