Gistak Media

Teacher's Day 2025 : ஆசிரியர் தினம் வரலாறும், முக்கியத்துவமும்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோர்கள் நமக்கு வாழ்க்கை அளிப்பவர்கள் என்றால், ஆசிரியர்கள் நமக்கு அறிவு, நன்னடத்தை (ஒழுக்கம்), பகுத்தறிவு, குணநலன், சிந்தனை முறை என அனைத்தையும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகுந்தது. இதற்காக அவர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்தும் நாளாகவே உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5-ம் நாள் முன்னாள் ஜனாதிபதியும், புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் (Teacher’s Day 2025) பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் “ஆசிரியர் தினம்” கொண்டாடப்படுகிறது. மேலும் உலகளவில் அக்டோபர் 5 அன்று ‘உலக ஆசிரியர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

ஆசிரியர் தினத்தின் வரலாறு (Teacher's Day 2025)

டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1962-ம் ஆண்டு முதல் 1967 வரை இந்தியாவின் 2 வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். அப்போது அவர் கல்வியை மனித வாழ்க்கையின் அடிப்படை தூண் என மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது, அவருடைய பிறந்தநாளை மாணவர்கள், நண்பர்கள் கொண்டாட விரும்பினர். அதற்கு ராதாகிருஷ்ணன் என்னுடைய பிறந்தநாளை தனிப்பட்ட விழாவாக கொண்டாடாமல், ஆசிரியர் தினமாக கொண்டாடினால் மகிழ்ச்சி அடைவேன் என்றார். அதன் பிறகு 1962-ம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 5 ‘இந்தியாவின் தேசிய ஆசிரியர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Teacher's Day 2025 - Gistakmedia

சர்வதேச ஆசிரியர் தினம்

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1966-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அன்று ‘ஆசிரியர்களின் நிலை குறித்து பரிந்துரைகள்’ என்ற ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதை நினைவு கூறும் விதமாக அன்று முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5-ம் தேதி ‘உலக ஆசிரியர் தினமாக’ (World Teachers Day) கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களின் உழைப்புக்கும், அவர்கள் எல்லையற்ற அர்ப்பணிப்புக்கும் மாணவர்கள் நன்றிக்கடன் செலுத்தும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்நாளில் மாணவர்கள் ஆசிரியர்களுடன் நெருக்கமாக கலந்துரையாடுவதால், பாசமும் மரியாதையும் (Teacher’s Day 2025) அதிகரிக்கிறது. மேலும் ஆசிரியர் தினம் ஒவ்வொருவருக்கும் கல்வியின் அருமை, அறிவின் சக்தி, அறிவாளிகள் உருவாகும் பாதையை வலியுறுத்துகிறது. மேலும் இந்நாள் நாட்டின் எதிர்கால முன்னேற்றம் குறித்து சிந்திக்க வைக்கும் நாளாகும். 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top