Gistak Media – Cinema News | Trending News | Latest News

தொலையுணர்வு (TELEPSYCHICS) நூல் திறனாய்வு - ஜோசப் மர்ஃபி

இயல்பாக நாம் நினைக்கும் சில விஷயங்கள் நடக்கும்போது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அதேசமயம் நாம் நினைக்காத சில விஷயங்களும் நம் வாழ்க்கையில் நடக்கும். அப்போது நாம் நினைப்பது ஒன்றுதான்.

இந்த செயலை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், இது எப்படி நடந்தது, எப்படி இந்த நிகழ்வு சாத்தியமானது என்றெல்லாம் சிந்தித்து பார்ப்பதுண்டு. ஆனால் உண்மையாக சொன்னால் அந்த செயல் நாம் நினைத்தது தான். நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளுக்கும் நாம்தான் பொறுப்பு. நம் மனதிற்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது. எனவே எப்போதும் நல்ல சிந்தனைகளையே செய்ய வேண்டும். அது மட்டுமே நம் வாழ்க்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்லும். நம் மனதிற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன? நமக்கு தேவையானதை எப்படி நாம் அடையவேண்டும்.

பிரபஞ்சத்திடம் தொடர்பு கொள்வது எப்படி இது போன்ற செய்திகளை இந்த டெலிசைக்ஸ் (TELEPSYCHICS) புத்தகத்தின் மூலம் ஆர்தர் ஜோசப் மர்ஃபி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை இந்த பதிவில் காண்போம்.

தொலையுணர்வு (TELEPSYCHICS) நூல் அறிமுகம்:

மறைந்திருக்கும் ஆழ்மன சக்தியை தட்டி எழுப்புவதுதான் டெலிசைக்ஸ் (TELEPSYCHICS). பாலூட்டி இனங்களிலே இரண்டு இனங்களால் மட்டும்தான் காரமான உணவை ரசித்து உண்ண முடியும். ஒன்று மனிதன் இன்னொன்று ட்ரிஷுஸ் என்னும் அணில் இனம்   பிரபஞ்சத்தில் இருக்கும் இந்த அற்புத சக்தியான தொலையுணர்வை புரிந்துக் கொண்டால் நீங்கள் எதை வேண்டுமானாலும் அடையலாம் என்று ஆர்தர் மர்ஃபி சொல்லுகிறார்.

நம் ஆழ்மனதில் நாம் விதைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைகள் நாம் நினைத்ததை அப்படியே நடத்திக்காட்டும். இந்த டெலிஸைக்கின் சக்தியை பயன்படுத்தினால் நாம் ஆசைப்பட்டது எல்லாமே அடைய முடியும். இப்படி எல்லாருடைய வாழ்க்கையை மாற்றுகிற இந்த டெலிசைக் என்றால் என்ன? டெலிஸைக் என்பது எளிமையானது, தர்கரீதியானது, மற்றும் அறிவியல்முறையானது இது மூலமாக நம் ஆழ்மனதில் இருக்கும் ஆழமான ஆசைகளையும் நிறைவேற்ற முடியும்.

தொலையுணர்வு (TELEPSYCHICS) நூலின் விரிவாக்கம்:

டெலிசைக்ஸ் என்பது நம் மூளையின் சக்திவாய்ந்த மிக பெரிய சக்திகளை ஒன்றுக்கொன்று இணைப்பது. டெலிசைக்கின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இது அனைத்து மனிதருக்குள்ளும் இருக்கிறது. இந்த உலகத்தில் நிறைய மக்கள் டெலிஸைக்கை பயன்படுத்தியுள்ளார்கள். ஆம் மனதின் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் கண்டிப்பாக நாம் நினைக்கும் விஷயங்களை நினைத்தப்படி கண்டிப்பாக அடைய முடியும்.

நம் முன்னாடி ஒரு மேஜிஷியன் வந்து மேஜிக் செய்து காண்பித்தால் நாம் எப்படி ஆச்சரியப்பட்டு பார்ப்போமோ அதேபோல் தான் இந்த மேஜிக்கும் இருக்கும். இதை ஏன் ஆர்தர் மேஜிக்குடன்  ஒப்பிடுகிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. மேஜிக் செய்பவர் எப்படி கண்களுக்கு புலப்படாத செயல்களை ஒரு சில யுக்தியுடன் செய்து நம்மை ஆச்சர்யப் படுத்துகிறாரோ அதேபோல்தான்  இந்த டெலிஸைக்ஸ்.

நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் நமக்கு நடக்கும்போது அதை நம்பவே முடியாதது போல் எண்ணம் வரும். ஆனால் கடைசியாக தான் தெரியும் நாம் ஆசைப்பட்டு கேட்ட ஒரு விஷயத்துக்கு பின்னாடி இவ்வளவு யுக்தி இருக்கிறதென்று. இதே ஆச்சர்யத்துடன் தான் நாம் யோசிப்போம்.

நடந்ததற்கு பின்னாடி ஒரு மேஜிக் இருக்கிறது. இதில் பாசிட்டிவிட்டி(Possitivity), ஈர்ப்பு விதி இது போன்ற நிறைய விஷயங்கள் பங்களித்துள்ளது. ஒரு விஷயத்தை நாம் என்றைக்கு புரிந்துகொள்ளவில்லையோ அப்போதுதான் அது மேஜிக்காக இருக்கும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப மேஜிக்  மேஜிக் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது நம் ஆழ்மனதில் மேஜிக்தான் என்று பதிந்து விடும்.

உங்களுக்கு எது தேவையோ நீங்கள் எதுவாக இருக்க ஆசைப்படுகிறீர்களோ அதை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆழ்மனதை நம்பவைத்துக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு எழுத்தாளர் ஆவதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்றால், எழுதிக்கொண்டே இருப்பது போல் திரும்ப திரும்ப மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் ஆசைப்பட்டது அடைய முடியும்.

நம் உணர்வுகளும் நம் எண்ணங்களை தாக்கும் நாம் எப்படி சிந்திக்கிறோமோ அதே போன்றுதான் உணர்வும் எப்படி உணர்கிறோமோ அப்படித்தான் சிந்திப்போம். அதாவது ஒரு சோகமான சம்பவத்தை அல்லது கெட்ட சம்பவத்தை பற்றி நாம் நினைக்கிறோம் என்றால் உடனே அதனுடைய சோக உணர்வை உணர முடியும். அது நம் மனதை கஷ்டப்படுத்தும். இதுவே மகிழ்ச்சியான நிகழ்வை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க முடியும். அந்த மகிழ்ச்சியை நன்றாக உணரமுடியும். இதனால்  நம் சிந்தனைகளும் சரி உணர்வுகளும் சரி ஒன்றையொன்று பிணைக்கப்பட்டது.

பிராத்தனையின் மூலமாக இறைவனிடம் பேசும்போது அந்த சக்தியையும், உணர்ச்சிகயையும் உங்களால் உணர முடியும். இதனால் கடவுளுடன் நாம் தொடர்பு கொள்வோம் இதனுடன் நம் வாழ்க்கையையும் முழுமை படுத்திக்கொள்வோம். இங்கு கடவுளின் சக்தி என்று மஃபி எதை சொல்லுகிறார் என்றால் உள்ளுணர்வு சக்தியைத்தான் சொல்கிறார். இந்த சக்தி நம் ஆழ்மனதில் தான் இருக்கிறது.

நம் உள்ளுணர்வு சக்தி நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்துவிடும். எந்த வகையான செய்திகளையும் இந்த உள்ளுணர்வு சக்தியை வைத்தே பிரபஞ்சத்திற்கு அனுப்பி விடமுடியும். நம்மிடம் இருக்கும் சிறந்த திறமை நம்மை சரியான முறையில் வழிநடத்தி செல்லும். இந்த உள்ளுணர்வு சக்தியானது நம்மிடம் நிறைய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கவும் செய்யும்.

இந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையை நம் ஆழ்மனதின் மூலமாக பிரபஞ்சத்திற்கும் அனுப்ப முடியும். இதனால் நீங்கள் சிந்தித்த அந்த எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையோடு நிஜமாக மாறும். அதனால் உங்களின் எண்ணங்கள் நினைவாக வேண்டுமென்றால் இந்த டெலிஸைக் முறையை பயன்படுத்துங்கள். உங்கள் மூளையுடன் பேசுங்கள். வாழ்க்கையில் எது உண்மையாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த எண்ணங்களை உங்கள் மூளையில் விதைத்துக் கொள்ளுங்கள்.

டெலிஸைக் (Telepsychic) என்னும் வார்த்தை Tele  மற்றும் Psychic இந்த இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவாகியுள்ளது. Tele என்பதற்கு தொடர்புகளுடையது என்று பொருள் Psychic என்பதற்கு நம்முடைய ஆன்மா என்று பொருள். நம் ஆன்மாவுடன் நாம் தொடர்பு கொள்ளும் முறைதான்  டெலிஸைக் (Telepsychic). நாம் பிராத்தனை செய்யும்போதுதான் இந்த விஷயம் நடக்கும்.

பிராத்தனை செய்வது என்றால் என்ன? நம் மூளையுடன் பேசுவதுதான் பிராத்தனை செய்வது என்று அர்த்தம். நம் நம்பிக்கையும் அது நடக்குற முறையும்தான் இந்த டெலிஸைக் சக்தி. இந்த டெலிஸைக் முறையை நாம் பயன் படுத்தும்போது நம் எண்ணங்களை புரிந்து மூளை அதற்கேற்ப எல்லாவற்றையும் உண்மையாக்க முயற்சி செய்யும். இந்த டெலிஸைக் முறையை பயன்படுத்தி நம் எண்ணத்தில் செயலில் மட்டும் மாற்றம் கொண்டுவருவது மட்டுமின்றி, முழு வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டுவரும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை செயலுண்டு. நாம் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் ஆழ்மனதிற்கு சொல்லிக்கொண்டே இருக்கிறோம் என்றால் அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்து விடுகிறோம். நேர்மறை சிந்தனைகள், எதிர்மறை சிந்தனைகள் இவை இரண்டும் தான் நம் மூளையில் உதிக்கும். ஒரு விஷயத்தை சிந்திக்கும்போது, நாம் பெரும்பான்மையாக எதிர்மறை சிந்தனையை கவனிக்காமல், நேர்மறை சிந்தனைகளையே சிந்திக்க வேண்டும்.

நாம் சிந்தனை என்று ஒரு ஆக்க்ஷனை செய்யும்போது நாம் சிந்தித்த ஒரு செயலை நிஜமாக நடத்திக்காட்டி அது ரியாக்க்ஷனை கொடுக்கும். இந்த ரியாக்க்ஷன் எப்படி நடக்கிறது என்றால் நம் ஆழ்மனதில் உருவாக்கப்பட்ட நம்பிக்கையில்தான் நடக்கிறது. நம் எண்ணங்கள் தான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இதுக்கான அர்த்தம் என்னவென்றால் நாம் என்ன சிந்திக்கிறோமோ அதுதான் நம் எதிர்காலமாக வந்து அமையும். உங்கள் எண்ணங்கள் செயல்களாக மாறவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முதலில் கற்பனை செய்ய வேண்டும்.

எதை நீங்கள் நடக்கும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை கற்பனை செய்யுங்கள். அவை நடந்தால் எப்படி மகிச்சியோடு இருப்பீர்களோ அந்த உணர்வை வெளிப்படுத்துங்கள். உங்கள் எண்ணங்கள் நல்லதாக இருந்தால் உணர்வும் நல்லதாக இருக்கும். நீங்கள் உள்ளுணர்வு சக்தியால் நிரப்பப் பட்டிருக்கிறீர்கள் என்பதை முழுமையாக நம்ப வேண்டும். அந்த உள்ளுணர்வு சக்தியுடைய ஆழ்மனது உங்களை என்ன வழியில் வேண்டுமானாலும் வழிநடத்தி கொண்டுபோகும்.

உங்களுக்கென்று ஒரு பாதையை உருவாக்கி,  உங்களின் ஆசையை அடைவதற்கு சரியான வழியை ஆழ்மனது காட்டும். உங்கள் ஆழ்மனதை பயன்படுத்தி கற்பனை செய்யுங்கள். கற்பனையிலே உங்களுக்கு கிடைக்கக்கூடிய விளைவு என்னவென்று புரியும்.

நேர்மறையான சொற்களினால் உங்களின் எண்ணங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் இந்த உள்ளுணர்வு சக்தியுடன்தான் தினமும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த உள்ளுணர்வுதான் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். எதுவாக இருந்தாலும் இந்த சக்தியை முழுமையாக நம்புங்கள். அது என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்றுங்கள்.

நிறைய மக்கள்  இது எனக்கு வேலை செய்யவில்லை என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் சில எதிர்மறையான சிந்தனைகளும், உணர்வுகளும்தான். இந்த டெலிஸைக்கை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த டெலிஸைக் பயன்படுத்தும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து நேர்மறையான சிந்தனைகளையும், விஷயங்களையும் வைத்து மட்டும் உங்கள் உள்ளுணர்வை இயக்குங்கள். என்று ஆர்தர் மர்ஃபி இந்த புத்தகத்தின் வாயிலாக விளக்கியுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top