Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
தனுஷ் மற்றும் கிருத்தி சனோனின் நடிப்பில் உருவான ‘தேரே இஷ்க் மே’ இந்தித் திரைப்படம் (Tere Ishk Mein Movie Review) தமிழ் நாட்டின் திரையரங்குகளில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் இதற்கு முன்பாக வெளியான ‘ராஞ்சனா’ திரைப்படத்தைப்போல இல்லை என்ற கருத்தே மக்கள் மத்தியில் நிலவுகிறது.
'தேரே இஷ்க் மே' கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது
இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தில் தனுஷ், கிருத்தி சனோன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். துஷார் ரே சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் வசனங்களை ஹிமான்ஷூ ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் அழுத்தமாக எழுதி உள்ளனர். இது ஒரு கூடுதல் சிறப்பு ஆகும். இந்த ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தில் தனுஷ் மற்றும் கிருத்தி சனோனின் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருந்த போதிலும், இந்தப் படம் நல்லதொரு வரவேற்பை பெறவில்லை. தனுஷ் மற்றும் கிருத்தி சனோனின் நடிப்பில் வெளியிடப்பட்ட ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
திரைப்படத்தின் கதையில் தீவிரத்தன்மை இல்லை (Tere Ishk Mein Movie Review)
இந்த படத்தின் கதை மொத்தத்தில் வலுவாக எழுதப்பட்டு இயக்கப்படவில்லை. ராஞ்சனா படத்தை போல மீண்டும் ஒரு காதல் காவியமாக உருவாகியிருக்க வேண்டிய படம் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் கதையை டிராஜிடியாக கொண்டு செல்ல வேண்டும் என வலுக்கட்டாயமாக திட்டமிட்டே காட்சிகள் எழுதப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. மேலும் சித்தரிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் இயல்பாக இல்லை. அடித்தளமாக இல்லாமல் வெறுமனே சோகமான காட்சிகளை தொகுத்தது போல் தோன்றுகிறது. அவை எவ்விதமான தாக்கத்தையும் அளிக்கவில்லை. குறிப்பாக ஷங்கர் முக்தி இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன? அவர்கள் இணைவதில் என்ன சிக்கல் உள்ளது என்பதில் எந்தவொரு தெளிவும் சொல்லப்பட வில்லை. மொத்தத்தில் நடிப்பிலும், மற்றும் வசனங்களிலும் இருக்கும் தீவிரத்தன்மை ஆனது படத்தின் கதையில் இல்லை. திரைக்கதை இன்னும் வலுவாக எழுதப்பட்டிருந்தால், இது ஒரு க்ளாஸிக் காதல் படமாக அமைந்திருக்கும்.
தனுஷ் கதாபாத்திரம் ஷங்கராகவே மாறி ஜொலிக்கிறார்
நடிகர் தனுஷ் கதாபாத்திரம் ஷங்கராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தன் கோபத்தை அடக்க தெரியாத இளைஞனாக நடிகர் தனுஷ் சண்டையிடுவது முதல் கிருத்தி சனோனின் மீது காதல் கொள்வது மற்றும் காதலை இழக்கும்போது உடைந்துபோவது எனப் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார்.
கிருத்தி சனோன்ன் நடிப்பில் நல்லாவே ஸ்கோர் செய்துள்ளார்
கிருத்தி சனோனின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தனுஷுக்கு நிகராக கிருத்தி சனோனின் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகத்தியில் தேவதாஸ் போல காதலில் பாதிக்கப்பட்டு வாடும் காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார். கிருத்தியின் நடிப்பு வேற லெவலில் உள்ளது.
கண்கலங்க வைக்கும் பிரகாஷ் ராஜ்
தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இவர்களது நடிப்பைத் தாண்டி பிரகாஷ் ராஜ் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார். பிரகாஷ் ராஜ் ஊதாரி தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் மகனை பார்த்துக்கொள்ளும் தந்தையாக மட்டுமே படம் முழுக்க இருப்பாரோ என மக்கள் எதிர்பார்த்த நிலையில், மகனுக்காக ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வான் என சிறப்பாக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை திரைப்படத்திற்கு உயிரோட்டம் அளிக்கிறது
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் இந்த ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்திற்கு உயிரோட்டம் அளிக்கிறது. குறிப்பாக Usey Kehna மற்றும் Deewana Deewana ஆகிய பாடல்கள் அற்புதம். இந்தப்படப் பாடல்களில் ஒலிக்கும் Tere Ishq Mein டைட்டில் ட்ராக் மிக அழகாக பொருந்தி உள்ளது. இந்த (Tere Ishk Mein Movie Review) தீவிரமான காதல் கதையின் ஒளிப்பதிவை துஷார் ரே செய்துள்ளார்.
உண்மை காதலுக்கு 'தேரே இஷ்க் மே' ஒரு காவியம்.
அனைவருக்கும் ‘தேரே இஷ்க் மே’ காவியம் என்று சொல்லமுடியா விட்டாலும், மொத்தத்தில் உண்மையாக காதலிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காவியம் ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!