Gistak Media – Cinema News | Trending News | Latest News

விஜயின் தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்: Thalapathy 67 Cast And Promo Release Date

தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “வாரிசு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இதனை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பானது நடைபெற்று வருகிறது.

Thalapathy 67 Cast - Platform Tamil

Thalapathy 67 Cast And Promo – தளபதி 67 படத்தில் விஜய் 50 வயதான கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் அவருக்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘திருப்பாச்சி’, ‘கில்லி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை திரிஷா விஜயுடன் இணைந்து இந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பிக்பாஸ் 6 – வது சீசனில் கலந்து கொண்ட ஜனனி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என அவர் கூறினார்.

Thalapathy 67 - Platform Tamil

தளபதி 67 ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஹாலிவுட்டில் பிரபலமான ” ஹிச்டரி ஆஃப் வயலன்ஸ் ” என்ற படத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட லோகேஷ் படத்தின் உரிமையை வாங்கியதாகவும், அதனை தன்னுடைய வழியில் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் முழுவதும் லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதால் ரசிகர்கள் படத்தின் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளது. படத்தின் அப்டேட் வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி ப்ரோமோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top