Thalapathy 68 Movie Poojai Video : தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
Thalapathy 68 Movie Poojai Video :
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு (Thalapathy 68 Movie Poojai Video) வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லியோ ஆகும். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான லியோ, மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. அதற்குள் லியோ திரைப்படம் இவ்வளவு வேகமாக இண்டஸ்ட்ரி ஹிட் ஆகிவிட்டதா? என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். இந்த ஆண்டு வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ரூ.300 கோடியைத் தாண்டிய நிலையில், அந்தப் படங்களின் வாழ்நாள் சாதனையை 4 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்தது. இப்படம் ரிலீஸுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் 46.36 கோடிகளை வசூலித்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது. ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.44.5 கோடி வசூலித்துள்ளது. லியோ திரைப்படம் ரூ.148.5 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை லியோ படைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ வெளியாகி (Thalapathy 68 Movie Poojai Video) நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார். இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பைப் பற்றிய இந்தப் பாடலில் விஜய் , பிரபுதேவா , பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்கும் இப்பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Thalapathy 68 Movie Poojai Video : இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) படத்தின் பூஜை தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் (Thalapathy 68 Movie Poojai Video) வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!