Thangalaan Release Date : தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை (Thangalaan Release Date) தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கலான் :
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கினார். இது அவர் இயக்கிய படங்களில் மிக மோசமான விமர்சனம் பெற்ற படமாக அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அற்புதமான கதைகளை எழுதிய ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது போன்ற கதையை எழுதியிருக்கவே கூடாது. படம் ஃபேஸ்புக்கில் நடக்கும் உரையாடல் போல் இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகப் பேசினர். இப்படிப்பட்ட சூழலில் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்க கமிட்டானார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல்களில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதை பார்த்த ரசிகர்கள், விக்ரம் சும்மாவே அசுரத்தனமாக உழைப்பார். இப்போது பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் சொல்லவா வேண்டும். படம் நிச்சயம் மெகா ஹிட் ஆகும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த படத்தில் விக்ரம் நீண்ட தலை முடி மற்றும் தாடியுடன் பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். தங்கலான் படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் மாதங்கள் கடந்ததே தவிர தங்கலான் படம் வெளியாவதாக தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Thangalaan Release Date :
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டி புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் படக்குழு அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் (Thangalaan Release Date) என உறுதி செய்துள்ளார். படத்தின் இறுதிப் பிரதி மற்றும் சென்சார் சான்றிதழுக்கு ஜூலை மாதம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!