Gistak Media

Thani Oruvan 2 : ரவி மோகனின் 'தனி ஒருவன் 2' எப்போது தொடங்கும்? இயக்குநர் கொடுத்த அப்டேட்

தனி ஒருவன் 2 தொடங்குவது குறித்த முக்கிய தகவலை இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா ஆகியோர் (Thani Oruvan 2) நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் `தனி ஒருவன்’. சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் இன்று வரை தமிழ் சினிமாவில் சிறப்பான த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு மொழியில் ‘துருவா’ என்ற பெயரிலும், வங்காள மொழியில் ‘ஒன்’ என்ற பெயரிலும் ‘தனி ஒருவன்’ படம் ரீமேக் செய்யப்பட்டது. 

தனி ஒருவன் 2 (Thani Oruvan 2)

‘இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது’ என கடந்த 2023-ம் ஆண்டு ”தனி ஒருவன்” படம் வெளியாகி 8 ஆண்டு நிறைவானதையொட்டி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம் அறிவித்தது. மேலும் படப்பிடிப்பு 2024-ல் துவங்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. 

Thani Oruvan 2 - Gistakmedia

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில், இதுதொடர்பாக இயக்குநர் மோகன் ராஜாவிடம் கேட்கப்பட்டது. ‘சில நாட்களுக்கு முன்புகூட இதற்கான மீட்டிங்கில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் பேசினேன். அதற்கு அவர் தனி ஒருவன் 2 படத்திற்கான (Thani Oruvan 2) பட்ஜெட் இன்னும் முடிவாகவில்லை. அவர் இந்தக் கதையை கேட்டதும், ’இது சரியான நேரம் இல்லை’ என கூறினார். அதற்கு நான் அவரிடம் நீங்கள் நான் சொன்ன கதையைத்தானே கேட்டீர்கள்? என்றேன். ’இந்தக் கதைக்கு அவ்வளவு செலவாகுமா’ என கேட்டதற்கு அவர் ’இல்லை, நீங்க சாதாரணமான கதை சொல்லவில்லை. தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் கதைக்கு பெரிய முதலீடு தேவைப்படுகிறது. மேலும் இது சரியான நேரம் இல்லை. இது கண்டிப்பாக நடக்கும், ஆனால் கொஞ்சம் தமிழ் சினிமா துறையின் நிலை இன்னும் மேம்படட்டும்’ என்றார். நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் நினைத்ததுபோல விரைவில் நடக்குமா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக சரியான நேரத்தில் தனி ஒருவன் 2 வரும் என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top