Gistak Media

The Art Of Learning | வேகமாக கற்பது எப்படி

மனிதனாக பிறந்த அனைவருமே கற்றலை அடிப்படையாக கொண்டே தங்களின் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கின்றனர். ஒரு புதிய விஷயத்தை நாம் அறிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சிதான் கற்றல்.

இது அவரவர் கவனம் சார்ந்து கற்றல் திறனானது  அமைகிறது. கல்வி, வேலை, பயிற்சி, சமையல், வாகனம் ஓட்டுதல் மேலும் பல இவை அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முற்படுவதுதான் கற்றல். ஒரு செயலை கற்க நமக்கு ஆர்வம் இருந்தால் மட்டுமே அவற்றை சீக்கிரம் கற்க முடியும். கற்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால் அப்போது கவனச்சிதறல் ஏற்படுகிறது. கவனச்சிதறல் ஏற்பட்டால் நம்மால் ஒரு செயலையோ அல்லது வேலையையோ முழுமையாக கற்க முடியாது.

இவ்வாறு ஒரு புதிய விஷயத்தை கற்பது எப்படி, அதுவும் வேகமாக கற்பது எப்படி என்பதை ஆர்தர் ஜோஷ் வாய்ட்ஸ்கின் என்பவர் தி ஆர்ட் ஃஆப் லேர்னிங் (The Art Of Learning) என்னும் புத்தகத்தின் வாயிலாக தன் வாழ்க்கையில் நடந்த தருணங்களை பதிவிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து கற்றல் என்பது வெறும் படிப்பு சார்ந்த விஷயம் மட்டுமில்லை என்பதையும், அது ஒரு கலை என்றும் அதை சரியாக புரிந்து கொண்டால் நீங்கள் அந்த கலைக்கு சொந்தக்காரராக மாறலாம் என்பதைத்தான் இதில் எழுதியுள்ளார். அவற்றை விரிவாக இந்த பதிவில் காண்போம்.

The Art Of Learning - விரிவாக்கம்

If You Have To Win, You Have To Lose First

தன்னுடைய 10 வயதில் சதுரங்க போட்டிகளில் கலந்துகொள்ளும் ஜோஷ் தொடர்ந்து அந்த போட்டிகளில் தோற்கிறார். ரொம்பவும் வருத்தப்பட்ட அவர் அந்த சதுரங்க ஆட்டத்தையே வெறுக்கிறார். மீண்டும் அந்த ஆட்டத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. பின் ஒரு நாள் தனியாக உட்காந்து யோசிக்கிறார்.

இட்ஸ் ஓகே தோற்பதினால் இப்போ என்ன ஆகிடுச்சு அதை ஏற்று கொள்ளலாம். அதுலாம் ஒரு விஷயமே கிடையாது. என்று, தன்னைத்தானே சமாதானம் படுத்து கொள்கிறார். தான் தோற்று போனதற்கான காரணத்தை யோசிக்கிறார். எல்லா கலைகளிலுமே ஒரு ட்ரிக் இருக்கிறது. அதை மட்டும் நாம் கற்றுக்கொண்டால் நாமும் ஜெயித்து விடலாம் என்று மாற்றி யோசிக்கிறார்.

நாம் எத்தனை முறை தோற்றாலும் அதன் பிறகு வெற்றியை பார்க்கமுடியாது என்ற அவநம்பிக்கை மட்டும் நம்மிடம் இருக்கக் கூடாது. ஒவ்வொருமுறை தோல்வி, தாமதம் ஏற்படும்போது, நாம் எதற்கு இந்த முயற்சிகளை மேற்கொண்டோம், எதை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்பதை நினைவு படுத்திக்கொண்டாலே போதும் நமக்குள் வெற்றி அடையக்கூடிய வழியை உருவாக்கி கொள்ளலாம்.

Stay in the soft zone to accept distractions and perform in spite of them

ஒரு நாள் ஜோஷ் அவர்கள் சதுரங்க விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜோஷினுடைய கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவர் நினைவிற்குள் ஒரு பாடல் திரும்பி திரும்பி ஓடிக்கொண்டே இருந்தது. அந்த ஆட்டம் முடிந்த பிறகு ஜோஷ் செய்த முதல் காரியம். அவர் நினைவில் ஓடிய பாடலை வீட்டிற்கு சென்றதும் கேட்க ஆரம்பித்து விட்டார்.

அந்த பாடலை மீண்டும் மீண்டும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார். அப்படி கேட்கும்போது தன் மனதில் வரும் எண்ணங்களை அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டார். இதனால் பாடல்களின் மூலமாகவும் தன்னுடைய எண்ணங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொண்டு அடுத்த நாள் போட்டி தொடங்குவதற்கு முன்னாடி அந்த பாடலை கேட்டுவிட்டு தன்னுடைய எண்ணங்களை முறையாக செயல்படுத்திக் கொண்டு அதில் வெற்றி அடைகிறார்.

இதுபோல் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய கவன சிதறல்கள் ஏற்படும் ஆனால், அதை கெட்ட விஷயமாக மட்டும் நாம் பார்க்காமல் அந்த பலவீனத்தில் நம்முடைய பலத்தை கண்டு பிடிப்பதின் மூலமாக நாமும் வெற்றியாளராகலாம்.

கற்றல் என்பது அறிவு, பழக்கங்கள், திறன் இவைகளை புதிதாக இல்லையென்றால் இதற்கு முன் இருந்ததை பலப்படுத்தும் ஒரு செயல் என்று சொல்லலாம். இது மனிதர்களுக்கு மட்டும் பொருந்த கூடியது கிடையாது. விலங்குகளுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் பொதுவாக நடக்கும் ஒரு அனுபவம் என்றும் சொல்லலாம். அப்படி ஒரு நீண்ட பயணமா கற்றல் இருக்கும்போது இதில் தடங்கல் ஏற்படுவது என்பது புதிதானது கிடையாது. ஆனால் இந்த தடங்கல்களை எப்படி நம்முடைய வழிப்பாதையை மாற்றி அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். என்பது தான் மிகவும் முக்கியமானது.

நம்மில் பல பேருக்கு நமக்கு தெரியாத ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அதாவது நிம்மிடம் யாரேனும் வந்து அவர்களின் வெற்றியைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது அவற்றை சரியாக கவனிக்காமல் தன்னுடைய அனுபவங்களை கூறி அவர்களின் வெற்றியை அலட்சியம் செய்வது. இது போன்ற செயல்களை உடனே நிறுத்துவது கொஞ்சம் கடினமாக  இருந்தாலும். ஆனால் இதை தவிர்க்க வேண்டும். இதற்கு அடித்தளமாக இருப்பது ஈகோ. ஈகோ என்பது ஒரு எதிர்மறையான வார்த்தை கிடையாது.

நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்னும் உணர்வைத்தான் ஈகோ என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களுடைய இயல்பாக இருந்தலும். ஒரு உரையாடலில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததால் அவர்களின் மேல் நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை குறைத்து உங்களின் சக்தியை வீணடித்து அந்த உரையாடலுக்கே ஒரு அர்த்தம் இல்லாமல் போகிறது.

இதை தடுக்க நினைத்தால் உங்களுக்குள் ஒரு பொறுமையை கொண்டுவந்து, அடுத்த நபருக்கான வாய்ப்பை கொடுத்து அந்த உரையாடலை உங்களுக்கு உபயோகமாக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலமாக நீங்கள் நிம்மதியாகவும் இருக்கமுடியும், அடுத்தவர்களை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். கற்றலில் நம்மை சுற்றி இருப்பவர்களிடம்  இருந்தும் நமக்கு தேவையானதை நம்மால் அடைய முடியும் என்பது இதன் மூலம்  புரிந்திருக்கும். 

முக்கியமாக The Art Of Learning புத்தகத்தில் ஆர்தர் சொல்லி இருப்பது என்னவென்றால் அவருடைய வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு விஷயம் மன நிம்மது அதை கண்டுபிடித்ததின் மூலமாக இவர் ஒரு அழகான வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டார்.

உங்களுடைய இலட்சியத்தை நீங்கள் கவனிப்பதற்கும், உங்களுடைய கவனத்தை எளிதாக  அதில் செலுத்துவதற்கும் தேவைப்படுவது மனநிம்மதியும், பாசிட்டிவ்வான பனப்பான்மையும் தான் என்று சொல்கிறார். உங்களின் வாழ்க்கையில் நீங்கள் பெரிய விஷயங்களை சாதிப்பதற்கு முன் நிதாரணமாகவும், நிலைகுலையாமலும் உங்கள் மனதை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மன நிலை உங்களை சதுரங்க போட்டியில் மட்டுமில்லாமல் வாழ்க்கையின் போட்டி களத்திற்கும் உங்களை தயார்படுத்தும்.

Take a break:

ஒரு செயலை செய்யும்போது எந்த அளவிற்கு அதில் முயற்சியையும், நேரத்தையும் செலவழிக்கிறோமோ அதே அளவிற்கு அந்த செயலில் இருந்து ஓய்வு எடுப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கண்டிப்பாக உங்கள் முயற்சிகளை அடுத்த முறை இன்னும் இரட்டிப்பாக்க உதவி செய்யும். இதுபோல் செய்வதை தவிர்த்து.

நிதானம் இல்லாமல் உங்களுக்குள் இருக்கும் வேகத்தை இந்த உலகத்திற்கு உணர்த்த ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க நினைத்தால் கண்டிப்பாக இடையில் சோர்வு அடைந்து அந்த வேலை முடிக்காமல், அடுத்த வேலை செய்வதற்கும் தெம்பில்லாமல் சோர்த்து விடுவீர்கள். இதனால் எந்த அளவிற்கு உங்கள் வேளைக்கு முக்கியத்துவம் தருகிறீர்களோ அதே அளவுக்கு அதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து உங்களுக்கு புத்துணர்வு கிடைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நாம் எதற்காக ஒரு போட்டியில் வெற்றி பெறனும்னு நினைக்குறோம், அதோட பலன் என்ன அதோட சந்தோஷம்தான் அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை ஏன் போட்டி இடும்போது வரும் பயத்தினால் இழக்கனும். எந்த அளவிற்கு அங்கு வெற்றி பெறுவது முக்கியமோ அதே அளவிற்கு அந்த தருணத்தை அனுபவிப்பதும் ரொம்ப முக்கியம். அதுக்கு நீங்க நன்றி உணர்வை தினமும் உங்களுக்குள் கொண்டு வரவேண்டும். இது போன்று சில விஷயங்களை செய்வதன் மூலமாக நீங்கள் உங்களின் உடல் சோர்வையும், மன சோர்வையும் எளிமையாக எதிர் கொள்ளலாம். 

இறுதியாக ஜோஷ் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த உலகம் முழுக்க இருக்கக்கூடிய கல்வி முறையில் கற்றல் என்பது ஒரு பெரிய பகுதியா இருக்கிறது. தினமும் பாட சாலைகளில் கற்றல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் எத்தனை கற்றல் அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிற ஒரு செயல்திறனாக இருக்கிறது.

இதனால் புத்தக வழி கற்றலை மட்டுமே நம்பி இருந்தால் ஜோஷ் சொல்லி இருக்க எல்லா விதமான லேர்னிங்கும் நமக்குள் உருவாவது ரொம்பவே கடினமான விஷயம் இதனால் கண்ணுக்கு புலப்படும் எல்லா விஷயங்களில் இருந்தும் கற்றலை தொடங்குங்கள் அப்பொழுதுதான் கற்றல் என்னும் கலையை நீங்கள் சொந்தம் கொண்டாட முடியும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top