-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
The Brain-The Story of You புத்தக விமர்சனம்
தி பிரைன்(The Brain-The Story of You) இந்த புத்தகத்தை எழுதியவர் டேவிட் ஈகள்மேன் இவர் ஒரு நியூரோ சயின்டிஸ்ட் அறிவியல் தொடர்பாளர் அது மட்டுமின்று ஒரு நல்ல ஆர்தர். இவர் நிறைய புத்தகங்களை எழுதவில்லை என்றாலும் இவருக்கு தெரிந்த பல விஷயங்களை மக்களுக்கு தெரியவைக்க நல்ல ஊக்கத்துடன் எழுதப்பட்டது தான் இந்த புத்தகம். தி பிரைன் (The Brain-The Story of You) புத்தகத்தில் மனிதனின் மூலையைப் பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை இந்த பதிவில் காண்போம்.
மூளை என்பது என்ன? நம்மை பொறுத்த அளவில் (Brain) மூளை என்பது நம் உடலில் இருக்கும் ஒரு பகுதி அதன் மூலமாக தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்ய முடிகிறது. அது மட்டுமின்றி நம் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் (Replacement) மாற்று உறுப்பு இருக்கிறது. உதாரணமாக இதய பிரட்சனை ஏற்பட்டால் மாற்று இதயம் பொருத்தப்படும், சிறுநீரக பிரட்சனை ஏற்பட்டாலும் மாற்று சீறுநீரகம் பொறுத்தப்டுகிறது.
காது கேட்க வில்லை என்றாலும் அதற்கும் இயந்திரம் இருக்கிறது. மூச்சுவிட முடியாததற்கு இயந்திரம் இருக்கிறது. ஆனால் மூளைக்கு இப்படி எதுவும் கிடையாது. நீங்கள் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் மூளையில் பிரட்சனை என்றால் அதற்கு எந்த விதமான உதவியும் செய்ய முடியாது. ஏனென்றால் மூளைக்கு மாற்று உறுப்பு இல்லை.
தி பிரைன் (The Brain-The Story of You)
மனிதர்களாகிய நாம் பிறந்த உடனே ஏன் நிர்ப்பதில்லை, நடப்பதில்லை, ஓடுவதில்லை ஆனால் பிற உயிரினங்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் அவைகள் பிறந்த உடனே நிற்கிறது, நடக்கிறது.
உதாரணமாக டால்பின் பிறந்ததும் நீந்துகிறது, ஒட்டகச்சிவிங்கி பிறந்து சில மணி நேரங்களில் நிற்க கற்றுக்கொள்கிறது, வரிக்குதிரை பிறந்து 45 நிமிடத்திலே ஓட ஆரம்பித்துவிடும். இவையனைத்தும் மற்ற உயிரினங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அது எப்படி என்றால் எந்த ஒரு உயிரினம் பிறந்தாலுமே அதற்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் நிகழ்த்துவது போல் வயரிங் செய்ய ஆரம்பித்து விடும் அதனுடைய மூளை.
அடிப்படையில் (Pre Programing) முன் நிரலாக்க செயல் என்றும் சொல்லலாம். ஆனால் மனிதர்களுக்கு அப்படி கிடையாது. ஏனென்றால், நாம் குழந்தையாக இருக்கும் போது நம்முடைய நியூரான்ஸ் எல்லாமே வேறுபட்டு ஒன்றோடொன்று பிணையாமல் இருக்கும். அதன்பிறகு தான் நம்முடைய சென்சரேன் இன்பர்மேஷன் மூலமாக நம்முடைய நியூரான்ஸ் வளர ஆரம்பிக்கும். ஒன்று, இரண்டு என்று இல்லாமல் ஒவ்வொரு நொடியும் இரண்டு மில்லியன் நியூ கனெக்க்ஷன்ஸ் ஏற்படுகிறது. இதுவே நமக்கு இரண்டு வயது ஆகும்போது 100 டிரில்லியன்ஸ் ஸ்னாப்சஸ் ஏற்படும்.
1.5 கேஜி மூளையில் இவ்வளவு வேலைகள் நடக்கிறது. ஆனால் இந்த வேலைகள் எல்லாமே தானாக நடக்கிறதா அப்படி தானாக நடந்தால் எல்லாருக்குமே ஒரே அளவிலான திறமை இருக்க வேண்டுமே ஆனால் ஏன் அப்படி இல்லை. சூழ்நிலைகள், பராமரிப்பு, ஊக்குவித்தல் போன்றவைகளின் மூலம் அவரவர்களின் மூளை வளர்ச்சி மாற்றம் அடைகிறது.
முக்கியமாக குழைந்தைகள் மூளைக்கு ஹையர் பிளாஸ்டிசிடி இருக்கும். ஏனென்றால், அவர்கள் அப்பொழுதுதான் ஒவ்வொரு விஷயங்களையும் புதிதாக பார்ப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதுவே நாம் இளம்பருவத்தில் இருக்கும்போது நம் மூளையுடன் சேர்ந்து நம் உடலும் வளர்ச்சி அடையும் அப்போதுதான் நாம் முழுமையாக வளர்ச்சி அடைவோம்.
The Aging Brain
நமது உடலை உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை செய்து எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்கிறோமோ அதே போன்று நம்முடைய மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இல்லை என்றால் அல்சைமர், பார்கென்சன்ஸ் போன்ற நோய்கள் மூளையில் உள்ள திசுக்களை சேதப்படுத்தி நம் மூளையை செயலிழக்க வைத்துவிடும். இது போன்றுதான் ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களின் மன நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. இதைத்தான் சேஞ்சிங் பிரைன் என்று சொல்கிறோம்.
What is reality?
ரியாலிட்டி என்றால் என்ன ? ரியாலிட்டிக்கும் நம் மூளைக்கும் எந்த அளவிற்கு உறவு இருக்கிறது. ரியாலிட்டி என்பது இந்த மூளை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கும் கதை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் நம் கண்ணால் இந்த உலகத்தை பார்க்கிறோம், காதுகளால் இந்த உலகத்தை கேட்கிறோம், நம்முடைய சருமத்தினால் இந்த உலகத்தை உணர்கிறோம் என்றெல்லாம் நினைக்கிறோம் ஆனால் உண்மையில் இந்த கண் மற்றும் காது பார்க்கவோ, கேட்கவோ செய்வதில்லை ஒளி மற்றும் ஒலி உணர்வுகளை நம் மூளைக்கு கொண்டு சேர்ப்பது மட்டும்தான் இதன் வேலை. ஆனால் அவற்றை ஆராய்ந்து வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்வது மூளைதான்.
நாம் அன்றாட வாழ்க்கையில் எடுக்கிற ஒவ்வொரு முடிவுகளுமே நாம் கான்ஷியஸாக எடுக்கிறோமா இல்லை அன் கான்ஷியஸாக எடுக்கிறோமா இதை யோசித்தால் நாம் நிறைய முடிவுகளை அன் கான்ஷியஸாகதான் எடுக்கிறோம். நியோராலஜிகள் ஸ்டடி மூலமாக நீங்கள் செய்யும் அன்றாட வேலைகளுக்கு உங்கள் மூளை ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
விரைவான முடிவுகளுக்கு மூளை கவனம் செலுத்துவதில்லை. அதனால் தான் அவற்றை ஆட்டோ பைலட் மோட் என்று சொல்கிறோம். அதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பலமுறை செய்வதன் மூலம் அது தேவையா இல்லையா என்பதை யோசிக்காமல் தானாகவே அந்த செயலை செய்கிறோம். இதெல்லாம் நம் மூளை எடுக்கும் முடிவு கிடையாது.அந்த நேரங்களில் நம்முடைய செயல் திறன் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு செல்வாக்குப்பெறுகிறது. 95 % நியாபக திறன் நம் உடல் இயக்கத்திற்கு உதவி செய்வதால்தான் இதனை சப் கான்ஷியஸ் மெமரி பவர் என்று சொல்கிறோம்.
நீங்கள் உங்கள் மூளையைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலுக்கும், மூளைக்கும் இடையேயுள்ள பரிபாற்றத்தை படித்தால் மட்டுமே தெரியும். ஏனென்றால் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் மூளையுடன் தான் தொடர்பு கொண்டுள்ளது. அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டால் நம்மால் கட்டுப்படுத்தவோ, ஒருங்கிணைக்கவோ, உணவுகள், செயல்கள், நினைவுகள் இவை எதையுமே நாம் அனுபவிக்க முடியாது. இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ள நினைக்கும்போது அதைவிட சிறந்ததாக இருக்கிற நம் மூளை மற்றும் உடலைப் பற்றி தெரிந்துக் கொள்வது என்பது தகுதியான ஒரு விஷயம் என்று டேவிட் கூறுகிறார்.
Technology can't replace are brain
இந்த இயந்திரங்களின் உலகில் டெக்னாலஜி வளர்ந்து எவ்ளவு பெரிய ரோபோட்கள் வந்தாலும் அது மனித மூளைக்கு ஈடாகாது. ஏனென்றால் ரோபோட்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது அதை தாண்டி அவைகள் செயல்பட்டால் அது (Disaster) பேரழிவாகவும் மாறலாம். ஆனால் மனிதர்களின் மூளை அப்படி கிடையாது. எவ்வளவு பெரிய பெரிய வேலைகளை ரோபோட்கள் செய்தாலும், மனிதர்கள் செய்கின்ற சின்ன சின்ன வேலைகளை ரோபோட்களால் செய்ய முடியாது.
ரோபோட்களால் உணர்வுகளோடு தொடர்புகொள்ள முடியாது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்குமே தவிர ஏன் இந்த பதில் வந்தது, இந்த காரணங்களால் இப்படி பதில் கிடைத்துள்ளது என்பதை எல்லாம் இந்த ரோபோட் யோசிக்காது. மனித மூளைக்கு கோட், ஸ்க்ரிப்ட் இவைகளை தயார் படுத்தவேண்டும் என்பது கிடையாது இயல்பாக பார்ப்பதையும், கேட்பதையும், படிப்பதையும் வைத்து நம் மூளை தானாக புதுப்பித்து அந்தந்த காலத்திற்கு ஏற்ப தன்னை முன்னேற்றிக் கொள்ளும்.
ரோபோட்களுக்கு அனைத்துமே கோட் தான் ஒரு வெர்ஷன் மாறினாலும் அதை புதுப்பிக்க வேண்டும். இதனால் நம் மூளையை இயக்கவும், இணைக்கவும், செயல் படுத்தவும் எந்த ஒயரும், பேட்ரியும் தேவையில்லை. ரோபோட்கள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அவைகள் மனிதனின் ஒரு உயிருக்கு கூட சமம் கிடையாது. டெக்னாலஜி மற்றும் ரோபோட்களை தயாரிப்பதே மனிதர்கள் தான் என்பதை நாம் மறந்திட கூடாது என்கிறார்.
இந்த உலகத்தில் நடக்கின்ற விஷயங்களை மூளை நமக்கு எப்படி தெரிய படுத்துகிறது. நம் சென்சரி ப்ராஸஸ்கும், மூளைக்கும் எந்த அளவுக்கு இணைப்பு இருக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எப்படி மூளையை சார்ந்து இருக்கிறது. என்பதை இந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
நம் உடலை உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறோமோ அதே போன்று நம் மூளையை மேம்படுத்த தினமும் படித்தல், அறிவு சார்ந்த விளையாட்டு, ஆரோக்கியமான உணவு இவை எல்லாவற்றையும் பின்பற்றுவதும் அவசியம். என்று மூளையின் சிறப்புகள் மற்றும் அவற்றின் அதிசய ஆற்றலைப்பற்றி ஆர்தர் டேவிட் ஈகள்மேன் இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்.








