Gistak Media – Cinema News | Trending News | Latest News

The Power Of Focus Book Review in Tamil

கவனம்:

கவனம் என்றால் என்ன? மனிதனுக்கு கவனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? நாம் இயல்பாக ஒரு செயலை செய்வதற்கும், நம் சிந்தனைகளை கட்டுப்படுத்தி ஒருமுக தன்மையோடு ஒரு செயலை செய்வதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது.

நாம் செய்யும் செயலுக்கான தாக்கத்தை பொறுத்தே கவனம் அமைகிறது. நம் தேவையை அறிந்து அதற்கான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் கவனம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் ஒரு சமயத்தில் தோன்றும் பல வகையான எண்ணங்களில் ஒன்றை மட்டும் தெளிவாக மனம் எடுத்துக்கொள்ளும். இந்த தன்மையே கவனமாக பிரதிபலிக்கிறது. 

The Power Of Focus Book புத்தக அறிமுகம்:

தி பவர் ஆப் ஃபோகஸ் (The power Of Focus) – இந்த புத்தகத்தை ஜாக் கேன்ஃபில், மார்க் விக்டர்ஹான்சன், லெஸ் ஹியூயிட் என்னும் மூன்று ஆர்தர்கள் எழுதியுள்ளனர்.

உங்கள் வியாபாரம், சுயவாழ்க்கை மற்றும் பொருளாதார வாழ்க்கை இப்படி வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் முழு நம்பிக்கையோடு நிலையாக எப்படி வெற்றியடைவது என்பதுதான் இந்த புத்தகம். நிறைய முயற்சிகள் மேற்கொண்டும் நான் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று நினைப்பவர்கள், எல்லா இடங்களிலும் கவனம் சிதறுகிறது என்று வருத்தப்படுபவர்களுக்கு தி பவர் ஆப் போகஸ் (The power Of Focus) புத்தகம் கவனத்தோடு எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது.

இந்த புத்தகத்தில் 10 வகையான யுக்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஜாக் கேன்ஃபில், மார்க் விக்டர்ஹான்சன், லெஸ் ஹியூயிட் என்னும் மூன்று ஆர்தர்கள் எழுதியுள்ளனர். உங்கள் வியாபாரம், சுயவாழ்க்கை மற்றும் பொருளாதார வாழ்க்கை இப்படி வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் முழு நம்பிக்கையோடு நிலையாக எப்படி வெற்றியடைவது என்பதுதான் இந்த புத்தகம்.

நிறைய முயற்சிகள் மேற்கொண்டும் நான் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று நினைப்பவர்கள், எல்லா இடங்களிலும் கவனம் சிதறுகிறது என்று வருத்தப்படுபவர்களுக்கு தி பவர் ஆப் போகஸ் (The power Of Focus) புத்தகம் கவனத்தோடு எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது. இந்த புத்தகத்தில் 10 வகையான யுக்திகள் கொடுக்கப்பட்டுள்ளது.

The Power Of Focus Book நூல் ஆய்வு:

The Power Of Focus Book ஆசிரியர்கள் பத்து வகையான யுக்திகளை கையாண்டுள்ளனர்.

  1. அறிமுகம்.
  2. உங்கள் பழக்க வழக்கங்கள் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
  3. கவன உணர்வை வளர்த்துக்கொள்வது.
  4. பெரிய அளவில் கற்பனை செய்தல்.
  5. தடங்கள் களில் இருந்து எப்படி முன்னேறி வருவது.
  6. சிறந்த உறவு முறைகளை கட்டமைப்பது.
  7. தன்னம்பிக்கை.
  8. உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள்தான் கேட்க வேண்டும்.
  9. நிலையான விடாமுயற்சி.
  10. தேவையான செயல்களை செய்வது. இவ்வகையான யுக்திகளே ஆகும். இதில் சிலவற்றை பார்ப்போம்.

உங்கள் பழக்கவழக்கங்கள் தான் உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று எண்ணி முழு நம்பிக்கையுடன் பயணப்படுங்கள். முழு நம்பிக்கையுடன் பயணப்படுகிறீர்கள் என்றால், உங்களுடைய சௌகரிய நிலையில் செயல்பட ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் சௌகர்ய நிலையில் இருந்து வெளிவரவேண்டும். கவனமாக உங்களின் முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள் நினைப்பது எல்லாமே சாத்தியமாகும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகளும், செயல்களும் தான் நாளைய தினத்தில் நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். மொத்தத்தில் உங்களின் பழக்க வழக்கங்கள் தான் உங்களுடைய எதிர் காலத்தை தீர்மானிக்கப்போகிறது. இதனால் உங்கள் பழக்க வழக்கங்கள் சரியானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும். 

ஒருமுறை உங்களின் பழக்க வழக்கங்களை தீர்மானம் செய்து விட்டால், அதை மாற்றுவது கடினம். அதை மாற்ற முயற்சி செய்தால் பழைய பழக்க வழக்கங்களை கண்டிப்பாக மாற்ற முடியும். வெற்றி என்பது அதிஷ்டத்தில் வருவதுக் கிடையாது. அப்படி வந்தாலும் கடைசிவரை நிலைக்காது. இதற்காக நீங்கள் பின்பற்றுகிற ஒழுக்கமுறை, உங்களின் கவனம் இதுஎல்லாம் தான் வெற்றியை தீர்மானிக்கும்.

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க கூடாதுதான். ஆனால், இந்த நிமிடம் நாம் செய்யக்கூடிய தவறுகள், பழக்க வழக்கங்கள் இதெல்லாம். எதிர்காலத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும். என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆர்தர் ஜாக் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் மூன்று விடயங்களை பகிர்ந்துகொள்கிறார். 

  • தேவையான அளவில் தூக்கம் வேண்டும் அதுவே நம் உடலில் இருக்கும் நோய்களை குணப்படுத்தி இளமையாக வைத்திருக்கும்.
  • நிறைய மனிதர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கும்போது வெளியுலக அனுபவம் கிடைக்காமல் போகிவிடும். இதனால் மனநலம் பாதிக்கும்.
  • கதை சொல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது வியாபாரத்திற்கு தேவைப்படுகின்ற முக்கியத்திறன் என்று சொல்லப்படுகிறது. நல்ல பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற கெட்ட பழக்க வழக்கங்கள் நம்மைவிட்டு தன்னாலே மறையும்.  

தொழில் செய்பவர்கள் செய்யும் பெரிய தவறு ஒரு செயல்களில் கவனம் செலுத்தாமல் பல செயல்களை செய்வது. இதுபோல் செய்வதை தவிர்த்து ஒரு வேலையில் மட்டும் பொறுமையாக, படிப்படியாக அந்த வேலையில் கவனம் செலுத்தி முன்னேறும்போது தான்.

வெற்றிப்பாதையில் எளிதாக பயணிக்க முடியும். உங்கள் பலம் என்ன? எதை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் இதை கண்டுபிடித்து தினசரி உங்களின் கவனத்தை வளர்த்துக்கொள்ள நேரத்தை செலவிட வேண்டும். பயிற்சி மிகவும் அவசியம். நாம் ஒரு திறமையில் முழு கவனத்தை செலுத்தி அதை திருப்ப திரும்ப பயிற்சி செய்துகொண்டே வரும்போது உங்களுக்கான திறன் வலுவாகும்.

வெற்றியும் எளிதாகும் நம் பலவீனம் என்ன அதை எப்படி சரிசெய்வது. என்பதில் தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பலவீனத்தில் அதிகம் கவனம் செலுத்தினால் பலவீனத்தின் வலிமை அதிகரிக்கும். அதை எண்ணி நீங்கள் உங்கள் பலத்தை வளர்க்கவேண்டுமா இல்லை பலவீனத்தை வளர்க்கவேண்டுமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் செயல்களை மிக மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் செய்ய வேண்டும். 

பெரிய அளவில் கற்பனை செய்ய வேண்டும். சிந்திப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.இதுவே வெற்றியின் முக்கிய இரகசியம் என்று சொல்கிறார் பீட்டர். நீங்கள் புதிய இலக்குகளை உருவாக்கி அதன்படி நீங்கள் செயல்பட்டு. புதிய திட்டங்களை வகுத்து முடிவுகளை தேர்ந்தெடுக்கும் போது உங்களுக்கு கிடைக்கும் வெற்றி வித்தியாசமானதாக இருக்கும்.

ஆர்தர்ஸ் எல்லாரும் உங்கள் குறிக்கோள்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு சொல்கிறார்கள். உங்கள் இலக்கு உங்களுடையதாக மட்டும்தான் இருக்க வேண்டும், உங்கள் இலக்கிற்கு அர்த்தம் இருக்க வேண்டும், குறிப்பிட்டதாக இருக்க வேண்டும், அளவிடக்கூடியதாக இருக்க வேண்டும், இணக்கமுள்ளதாக இருக்க வேண்டும். சவால் நிறைந்ததாக இருக்கவேண்டும், அந்த இலக்கை நினைத்தாலே உற்சாகம் வரவேண்டும், உங்களுக்கு நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுகளுடன், உங்கள் இலக்குகள் ஒத்துப்போக வேண்டும்.

சமமான நிலையில்தான் உங்கள் இலக்குகள் இருக்கவேண்டும், உங்கள் இலக்குகள் நிஜமானதாக இருக்கவேண்டும், உங்கள் இலக்குகளில் உங்களின் பங்களிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெளிவான எதிர்காலம் வேண்டும் என்றால் அதில் தெளிவு என்பது முக்கியமானதாகும். மேற்கூறிய அனைத்தும் உங்களுக்கான எதிர்காலத்தை பெரிய அளவில் கற்பனை செய்வதற்கு உங்களிடம் இலக்கு இருக்கிறதா என்று உங்களை நீங்களே சோதித்து பார்க்க வேண்டும்.

இதுதான் உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் அது ஏன் வேண்டும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது எப்படியெல்லாம் வேண்டுமோ அப்படியெல்லாம் கற்பனை செய்ய வேண்டும். ஆழ்மனதில் பதிய வைத்து உங்களுக்கு வரக்கூடிய எண்ணங்களை எழுதிவைத்து கொள்ளுங்கள்.

கற்பனை செய்து சிந்தித்து அதை நிஜமாக்க வேண்டும். சாதனையாளர்கள் அனைவருமே கற்பனை செய்ததை தான் நிஜமாக்கி உள்ளார்கள். உங்களுக்கு தடைகள் பல வந்தாலும் அதை தவிர்த்து உங்களின் இலக்குகளில் உற்சாகமாகவும், மகிழ்சியாகவும் செயல்பட்டால் வெற்றி பயணமும் மகிழ்ச்சியானதாக அமையும்.

இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது பல சிக்கல்கள் உருவாகி தடங்கல்கள் நிறைய ஏற்படும் அது சாதாரணமான ஒன்று என்றாலும். இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது நமக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும்.

  • எதுமே செய்யாமல் எல்லாம் சரியாகும் என்று ஒதுங்கி இருப்பது.
  • சவால்களை எதிர்கொண்டு எல்லா தடைகளையும் எதிர்த்து வருவது. இதுதான் உங்களின் வரலாராக மாறும். இதில் எதை தேர்தெடுக்க வேண்டும் என்பதும் உங்களிடம் தான் இருக்கிறது.

சவால்களை தேர்ந்தெடுத்து அதில் சிறந்ததை செய்ய வேண்டும். சாதனையாளன் என்னும் மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். வித்தியாசமாக சிந்தித்து எதிர்பாக்காத அளவில் சாதனைகளை செய்ய வேண்டும்.

நாம் செய்யும் செயலில் திடமான மன உறுதிவேண்டும். அதிலிருந்து நாம் பின்வாங்கக்கூடாது. நம்பிக்கையை வைத்தே நாம் எதை வேண்டுமானாலும் அடைய முடியும். எதுவும் நிரந்தரமில்லை என்ற மனப்பான்மை வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கைதான் எந்த சூழ்நிலையிலும் உற்சாகமாக செயல்பட வைக்கும். எல்லாவற்றிற்கும் ஆயத்தமாக இருந்து அதை எதிர் கொள்ள வேண்டும். தடங்கல், தோல்விகள்,  பிரச்சனைகளில் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். தினமும் உங்களின் செயல்களில் கவனம் இருக்கவேண்டும். எப்போதுமே சாதனையாளன் என்ற எண்ணத்துடன் உங்களுக்கு எது சிறந்ததோ அதை அடைய வேண்டும். 

நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது நம் சிந்தனைகளும் நேர்மறையானதாக இருக்கும் இதனால் நிறைய வாய்ப்புகள் ஏற்படும். எதிர்மறையான மக்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

உங்களை சுற்றியுள்ள நல்ல மக்களின் உறவுகளும் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மனிதர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். தினசரி உங்களின் உறவுகளை கவனித்துக் கொண்டும் அதை சரிசெய்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

உங்கள் பயிற்சிகளின் மூலமாக தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும். உங்களுடைய வருத்தங்கள், பயம், நிலையில்லாத் தன்மை இதையெல்லாத்தையும் எதிர்க்கிற ஆயுதமாக இந்த தன்னம்பிக்கையை பயன்படுத்துங்கள். எந்த இடத்தில் உங்களின் தன்னம்பிக்கை குறைகிறதோ அங்கு  உங்களின் பயமும், வறுத்தமும் அதிகரிக்கும்.

உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வேண்டாம் என்று நினைக்கும் செயல்களை துணிந்து செய்ய வேண்டும். வியாபாரம் அல்லது வேறேதும் ஒரு செயலில் தோல்வி ஏற்பட்டால் அதற்கு பயப்படாமல் துணிந்து அதே செயலை செய்ய வேண்டும். நன்றியோட இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நீங்களே சவால் கொடுத்துக்கொண்டு, உங்களின் சின்ன சின்ன இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். எல்லா நாட்களிலும் எது உங்களுக்கு சரியானதோ அதையே நீங்கள் செய்ய வேண்டும். நேர்மறையான நம்பிக்கையும், எதிர்மறையான நம்பிக்கையும் நம்மிடம்தான் இருக்கிறது.

நம் வளர்ச்சியை தடை செய்யக்கூடிய எதிர்மறை நம்பிக்கைகளை விடுத்து. நமக்கு வளர்ச்சித் தரக்கூடிய நேர்மறை நம்பிக்கைகளை நம் மனதில் நிலைநிறுத்தி கவனம் செலுத்த வேண்டும். நிலையான விடாமுயற்சி இருக்க வேண்டும். ஒரு செயலில் நிலையாக இருப்பதற்கு விடாமுயற்சி அவசியமான ஒன்றாகும். தேவையான செயல்களை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரு செயலை செய்வதில் காலதாமதம் இருக்கக் கூடாது. ஊக்கம் இல்லாத போதுதான் ஒருசெயலை செய்ய காலதாமதம் ஏற்படும். எனவே உங்களை நீங்களே ஊக்குவித்து கொள்ள வேண்டும். உங்களின் வாழ்க்கைக்கான நோக்கம் என்ன என்பதை அறிந்து அதன்படி வாழவேண்டும்.

பொருட்களை சேர்ப்பது முக்கியம் அல்ல வாழ்க்கைக்கான நோக்கத்தை சேர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்குள் உள்ள திறமையை அறிந்து அதற்கேற்ப உங்களின் நோக்கத்தை கட்டமைக்கவேண்டும்.

உங்களின் நோக்கத்தில் உண்மையாகவும், நிலையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான நோக்கத்தை நீங்களே தெரிந்து கொள்ளலாம். என்றைக்கு நம் கவனம் அதிகமாகிறதோ அன்றைக்கு நம் வெற்றிப்பாதையும் விரிவடைந்து எளிதான பாதையை அமைத்து கொடுக்கும். மேற்கூறிய அனைத்தும் தான் இந்த தி பவர் ஆப் ஃபோகஸ் (The Power Of Focus) என்னும் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்.

ஆர்தர் சொன்ன இந்த விடயங்களை பின்பற்றினால் உங்கள் வாழ்வில் கவனத்தை சிதற விடாமல் முழுமையான வெற்றியைப் பெற்று கொண்டாடலாம். ஒரு மனிதனின் வாழ்வில் கவனம் எந்த அளவிற்கு தேவை, அது எப்படி நம் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை இந்த புத்தகம் சிறப்பாக விளக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top