The Road Trailer : தி ரோட் படத்தின் டிரைலர் வெளியீடு...
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படமான ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் (The Road Trailer) தற்போது வெளியாகி உள்ளது.
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் தி ரோட் ஆகும். இந்தப் படத்தை அருண் வசீகரன் இயக்குகிறார். த்ரிஷாவுடன் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர், மியா ஜார்ஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AAA சினிமா நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. இசைமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Road Trailer :
இந்நிலையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் (The Road Trailer) தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. மதுரையில் NH 44 நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டமிட்டு நடத்தப்படும் விபத்துகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று த்ரிஷா விசாரிக்கிறார். ஒரு த்ரில்லர் படத்தின் தீவிரம் படம் முழுக்க இருக்கும் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. சாம்.சி.எஸ் – இன் பின்னணி இசை கச்சிதமாக அமைந்துள்ளது. மேக்கப் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸுடன் வருகிறார் த்ரிஷா. நாயகியை மையப்படுத்தி வெளியான அவரது முந்தைய படங்களின் சறுக்கல்களை ‘தி ரோட்’ திரைப்படம் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது. தற்போது டிரைலர் (The Road Trailer) இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!