Thengai Poo Benefits In Tamil : தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இந்திய கலாச்சாரத்தில் ‘கற்பக விருட்சம்’ என அழைக்கப்படும் தென்னை மரம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இம்மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு பயனையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் தேங்காய் பூ பல்வேறு சத்துக்களை கொண்டிருப்பதால் இதன் முக்கியத்துவம் குறித்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் (Thengai Poo Benefits In Tamil) பேசப்பட்டு வந்துள்ளது. இந்த பதிவில் தேங்காய் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ பயன்கள், பயன்பாட்டு முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேங்காய் பூ (Thengai Poo Benefits In Tamil)
இரத்த சோகையை தடுக்கும்
தேங்காய் பூவில் இரும்புச் சத்தான ‘ஹீமோகுளோபின்’ அதிகளவு நிறைந்திருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி இரத்த சோகை வராமல் தடுக்கும். மேலும் பெண்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் ஏற்படும் ரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சருமத்திற்கு நல்லது
தேங்காய் பூவில் அதிகளவில் வைட்டமின் இ உள்ளது. மேலும், இரும்புச்சத்து உள்ளிட்ட அதிகப்படியான தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை நாள் முழுவதும் மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துருக்க உதவுகிறது. மேலும், சொரியாசிஸ் போன்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் உடலில் இருந்து வியர்வை இயற்கையாக வெளியேற உதவுகிறது.
உடல் எடையை குறைக்கும்
தேங்காய் பூவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த நார்ச்சத்தானது நீண்ட நேரம் பசியை அடக்க உதவுகிறது. இதனால் அதிகமாக உணவு உண்பது குறையும். எனவே சரியான முறையில் தேங்காய் பூவை உட்கொண்டால் உடல் எடையைக் எளிமையாக குறைக்கலாம். மேலும் தேங்காய் பூவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் பற்ககளை வலுவாக வைத்திருக்க உதவும்.
புற்றுநோயை தடுக்கும்
தேங்காய் பூவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகமல் தடுக்க உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் தேங்காய் பூ இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய நோயின் ஆபத்தை குறைக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!