-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.! -
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Think Straight Book: சரியான முடிவை எடுப்பது எப்படி?
Think straight – நேராக யோசி, நேர்கொண்ட பார்வை இது போன்று பல அர்த்தங்களை கூறலாம். சிந்தனைப் பற்றி நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும் அதில் நாம் சிந்திக்கும் முறையை எப்படி மாற்றுவது என்பதைப் பற்றிய படிநிலைகள் அதிகமாக குறிப்பிடவில்லை. ஆனால் ஆர்தர் டேரியஸ் யின் திங்க் ஸ்ட்ரைட் புத்தகத்தில் நாம் சிந்திக்கும் வழிமுறைகளை எப்படி எல்லாம் மாற்ற வேண்டும் என்பதை செய்முறை படிநிலைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
இதை நம் வாழ்வியலோடு புகுத்தினால் நாம் செய்யும் சிந்தனைகளை சரியான முறையில் மாற்றி அதற்கு ஏற்றவாறு வாழலாம். நாம் தினமும் சிந்திக்கும் சிந்தனைகள் அதிகமாக அர்த்தமற்ற, தேவை இல்லாத சிந்தனைகளாகத்தான் இருக்கும். அதை கண்டுபிடித்து நம் சிந்தனைகளில் இருந்து நீக்க வேண்டும். எது தேவையான மற்றும் அர்த்தமுள்ள சிந்தனையோ அதை மட்டும் தான் நாம் சிந்திக்க வேண்டும்.
தெளிவா சிந்திக்கின்ற தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு பயிற்சி வேண்டும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, தசைகள் பலம் பெற எப்படி உடல் பயிற்சிகளை மேற்கொள்கிறோமோ அதே போன்று தெளிவான சிந்தனைகளை சிந்திக்க நம் மூளைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.
சிந்தனை என்பது நாம் இறக்கும் வரை நம்முடன் பயணிக்கும். நம் மூளையானது எப்போதுமே ஒரு விஷயத்திற்காக (preoccupied) கவனமற்ற தன்மை தான் வைத்திருப்போம். நாம் ஒரு செயலை செய்வதற்கு நினைவில் வைத்து கொள்ள அந்த செயலை பற்றிய சிந்தனையோடுதான் இருப்போம். நிகழ்காலத்தில் செய்ய கூடிய வேளையிலும் கவனம் இருக்காது. இதுபோன்று கவனமற்ற தன்மையோடு இருப்பது எவ்வளவு தவறு என்பதை ஆர்தர் டேரியஸ் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.
எப்படியெல்லாம் நம் எண்ணங்கள் நமக்கு எதிராக வேலை செய்கிறது என்னும் இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார். மக்கள் எல்லோரும் அவர்களின் மூளையை கட்டுப்படுத்துவது இல்லை அவற்றை சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். எண்ணத்தையும் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்கள். இப்படி செய்வதை தவிர்த்து அவர்களின் மூளைக்கு ஆசிரியர்களாக வேண்டும். தான் என்ன யோசிக்க வேண்டும், எப்படி யோசிக்க வேண்டும் இது நம்மிடம் தான் இருக்கிறது.
ஒருமுறை நம் மூளையை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சரியாக வழிநடத்த முடியும். இந்த புத்தகத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் பின்வருமாறு பார்ப்போம்.
Think Straight Book முக்கிய கோட்பாடுகள்
- You Become What You Think – நாம் என்ன சிந்திக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம். நம்முடைய சுயநினைவில் வருகின்ற எண்ணங்களில் எதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகத்தான் மாறுகிறோம்.
- Importance of Practical Thinking – நடைமுறைக்கு சாத்தியப்படாத நிறைய விஷயங்களை நாம் சிந்திப்போம் ஆனால் செயல் வடிவில் யோசித்தால்தான் நம் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனின் மூளை ஒரு பெரிய இயந்திரம் என்றே சொல்லலாம் பெரிய பெரிய டாஸ்க் எல்லாம் செய்கின்ற அளவிற்கு எந்த டெக்னாலஜிக்கும் இல்லாத திறமைகள் மனிதனின் மூளைக்கு இருக்கிறது. நம் மூளை ஒருங்கிணைத்த ஒன்று அதனால் தான் நாம் புத்தி கூர்மை வாய்ந்த இனமாக இருக்கிறோம். அதே சமயம் சில நேரங்களில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிறைய விஷயங்களை நாம் சிந்திப்போம். கோட்பாடுகளின் படி பார்த்தால் நம் எண்ணங்கள் எல்லாவற்றிற்குமே தர்க்கம் இருக்கும். ஆனால் ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்றால் நம் எண்ணங்கள் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து இருப்பதை விட ஆசைகளை அடிப்படையாக வைத்துதான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. லாஜிக்கே இல்லாத எண்ணங்களும், ஆசைகளும்தான் நமக்குள் இருக்கிறது என்று ஆர்தர் கூறுகிறார். அதுமட்டுமின்றி நம் எண்ணங்கள் உருவாவதற்கு நம் உள்ளுணர்வுகள், உணர்வுகள், தவறான செய்திகள் இதுதான் முக்கியமான காரணங்களாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சரியான தகவல்கள் மூலமாகவும், செயல்முறை விஷயங்களின் மூலமாகத்தான் எண்ணங்கள் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் எந்த குழப்பங்களும் இல்லாமல் இந்த நிஜ உலகில் வாழ முடியும். சிந்தனைகளையும் நேர்படுத்த முடியும்.
- Use That Works – நம் மூளை நம்மை பயன்படுத்தக் கூடாது நாம் தான் நம் மூளையை நமக்கான தேவைகளை அடைவதற்கு பயன்படுத்த வேண்டும். நம் வாழ்க்கையை மேம்படுத்த நம் எண்ணங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். ஆனால் நமக்கு எது தேவை, எது முக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தேவை படும் விஷயத்திற்கும், நமக்கு மிகவும் முக்கியமான விஷயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த எண்ணம் உண்மையாக நடக்குமோ அதை மட்டும் பயன்படுத்தினால் நம் எண்ணங்களை நாம் கட்டுப்படுத்தலாம்.
- Clear Thinking Requires Training – நாம் இந்த உலகில் திறமைசாலியாக வேண்டும் என்றால் அதற்கு பயிற்சி அவசியம். சரியான முறையில் சிந்திக்க வேண்டும், சரியான முறையில் நடக்க வேண்டும் என்றால் அதற்கு நம் மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
- From Chaos To Clarity – நமக்குள் வரும் எண்ணங்களை நாம் குழப்பங்களாக மாற்றிக் கொள்கிறோம். கடந்தகால நிகழ்வுகளை மாற்ற முடியாது. அப்படி இருக்க நாம் ஏன் நிகழ்கால எண்ணங்களோடு குழப்பிக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தின் சிந்தனைகள் ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் கடந்தகால, நிகழ்கால என்று அனைத்து எண்ணங்களை சிந்தித்து குழப்பி வைத்திருக்கிறோம். எது நமக்கு தேவைப்படும் என்று நமக்கு தெரியாது. பயன்பாடு இல்லாத எண்ணங்களை விடுத்தது. நிகழ்காலத்திற்கு தேவையான எண்ணங்களை மட்டும் வைத்து கொள்ளவேண்டும். அப்போதுதான் எந்த மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளாக இருந்தாலும் அதில் நமக்கொரு தெளிவு கிடைக்கும். குழப்பமான எண்ணங்களை விலக்கி தெளிவான எண்ணங்களை சிந்தியுங்கள்.
- Life is Not Linear – நம் வாழ்க்கை நேரான கோட்டில் பயணிக்காது, அதற்கென்று பல வழிகளை ஒவ்வொரு திசைகளில் உருவாக்கி கொள்ளும். ஆனால் வாழ்க்கையில் நம்முடைய திட்டங்களை நேர்கோட்டில் உருவாகும்போது நம்முடைய இலக்கை எளிமையாக அடைந்து விடலாம். நாம் சரியான திசையில் வேலை செய்கிறோம் நம் சிந்தனைகள் சரியான திசையில் இருக்கிறது. என்றால் நாம் ஆசை படும் இலக்கை எதிர்பாத்ததை விட அதிகமான பரிசுகளோட நம் வாழ்க்கையின் நேரான கோட்டில் பயணித்து அடைய முடியும்.
- Connect The Dots – நம் மூளையின் செயல்பாடு நிறைய நியூரான் அணுக்களை இணைத்துத்தான் செயல்படும். நிகழ்காலத்தில் நமக்கு தேவையான விஷயங்களை நாம் கடந்த காலத்திலே கற்றுகொண்டிருப்போம். அப்போது தேவையான நேரத்தில் அந்த விஷயங்களை நாம் இணைக்கவேண்டும். இதன் மூலமாக நம்முடைய கடினமான சூழ்நிலைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். எனவே கடந்தகால எண்ணங்களில் எது தேவையான எண்ணங்களோ அதை மட்டும் நிகழ்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
- Filter Your Thoughts – நம் சிந்தனைகளைஅடிக்கடி வடிக்கட்ட வேண்டும். எது தேவை, எது தேவையற்றது என்று ஆராய்ந்து அவற்றையெல்லாம் அடிக்கடி பில்டர் செய்து மைண்டில் இருந்து விளக்கி விட்டால். நாம் சிந்திப்பதற்கு விழிமுறைகள் மாறும்.
- Stop Thinking – எதிர்மறை சிந்தனைகளை ஆர்தர் நிறுத்த சொல்கிறார். வருத்தம், மன அழுத்தம் இவைகள் ஆபத்தான எண்ணங்கள் அந்த எண்ணங்கள் நிமிடம் இருந்து நல்ல எண்ணங்களையும் அழித்து விடும். நாம் எந்த எங்களை சிந்தித்தாலும் அது நம் சுயநினைவோடுதான் சிந்திக்கிறோம் எனவே நம் சுயநினைவை வைத்து எதிர்மறையான எண்ணங்களை நம் மூளைக்கு வரவிடாமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.
- The Rule Of Thumb For Thinking – நம்மால் எந்த விஷயங்களை கட்டுப்படுத்த முடியுமோ அதை மட்டும் யோசிக்க வேண்டும். அதுவே தேவை இல்லாத, பயன்படாத, கட்டுபாட்டிற்குள் இல்லாத எண்ணங்களை வெளியேற்றிவிடும். நாம் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்கள் நம்முடைய ஆசைகள், நடத்தை, ஆக்க்ஷன் இவைகள்தான். நாம் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்கு உதாரணங்கள் மற்றவர்களின் வாழ்க்கை, கடந்த காலம், எதிர்காலம் இவைகள்தான்.
- Don’t Trust Your Mind – நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் நம்பக்கூடாது. அதே போன்று நம்முடைய மூளை நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அவற்றையும் நாம் நம்பக்கூடாது. ஒருதலை பட்சமாக பார்ப்பது, ஏற்கனவே வரையறுக்கப்பட்ட தவறான விஷயங்கள் நாம் கண்டுகொள்ளக்கூடாது. எது சரி, தவறு என்று பிரித்து ஆராந்தாலே நாம் மூளையை கட்டுப்படுத்த முடியும். நேரான சிந்தனையையும் கையாளமுடியும்.
- True vs Untrue – எது உண்மை, எது பொய் என்று நம் மூளைக்கு நாம் தான் பிரித்து காட்ட வேண்டும். எது உண்மை என்று புரிந்துக்கொள்ள வேண்டும். நம்மை ஈர்க்க திரைப்படங்களில் நிறைய காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் ஆனால் அவற்றையெல்லாம் உண்மையென்று நம்ப கூடாது. இதுதான் ரியாலிட்டி இதுதான் உண்மை என்று தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நாம் நியாபகத்தோடு வாழ்க்கையை நடத்தாதபோது நம் மூளை அதுதான் உண்மையென்று புரிந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. நமக்கு உண்மையாக இருக்கும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு பொய்யாக தெரியும். இந்த உண்மைகள் எல்லாம் நம்முடைய ஆசைகளில் இருந்துதான் அதிகமாக உருவாகியிருக்கும். ஒருதலையான சிந்தனை, பாரபட்ச சிந்தனை இவைகளை நம் மூளையில் இருந்து நீக்க வேண்டும். சிந்தனைகளை சீர்படுத்த வேண்டும்.
- Take Your Time to Think – பொறுமையாக சிந்தித்துதான் முடிவு எடுக்கவேண்டும். நாம் நீண்ட நாள் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் லாஜிக்காகவும் இருக்கு, சிறந்ததாகவும் இருக்கும்.
- Draw Your Thoughts – நம் எண்ணங்களை வரைபடங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தலாம். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கற்பனை திறன் மூலமாக வரைந்து அதிலிருந்து நம்முடைய எண்ணங்கள் என்ன நல்ல எண்ணங்கள் எது கெட்ட எண்ணங்கள் எது என்பதை பிரித்து நம் சிந்தனைகளை சரிசெய்து கொள்ள முடியும்.
- Be Yourself – நம்மை பற்றி நமக்குதான் தெரியும் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நாம் சிந்திக்க கூடாது. நாம் செய்யும் எல்லா செயல்களும் நம் எண்ணத்தை பொறுத்துதான் இருக்கும். நம் செயல்களை வைத்தே நம் எண்ணங்களை புரிந்துக்கொள்ள முடியும். நாம் நாமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று நம்முடைய உண்மையான சுயத்தை இழக்க கூடாது. அப்படி இழந்தால் நம்முடைய சிந்தனை நேரான வழியில் இருக்காது திசை மாறும்.
- Practical Money Rules – பணம் நம்மை வழிநடத்த கூடாது. நாம் தான் பணத்தை வழிநடத்த வேண்டும். ஒரு வேலை செய்யும்போது அதை பிடித்து செய்ய வேண்டும். பணத்திற்காக மட்டுமே செய்யும்போது அதற்கு அர்த்தம் மாற்றிவிடும். ஆர்தர் பணத்திற்கு என்று சில விதிமுறைகளை கூறுகிறார். நமக்கு எது தேவையோ, அத்தியாவசியமோ அதை மட்டும்தான் வாங்க வேண்டும். மாத வருமானத்தில் இருந்து 10% சேமிக்க வேண்டும். கடன்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும். கடன் வாங்குவது அதிக கடன்களை கொடுப்பது போன்றவைகளை தவிர்க்கவேண்டும். சேமிப்பதிலும் கஞ்சத்தனம் காட்டக்கூடாது. இவைகளைத்தான் பணத்திற்கான விதிமுறைகளாக ஆர்தர் கட்டாயம் கடைபிடிக்க சொல்கிறார். பணத்தின் மதிப்புகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பணத்திற்காக நம்முடைய சிந்தனைகளை அடிமையாக்க கூடாது. பணத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும்.
- Take Thinking Out Of Equation – சிந்தனைகளில் இரண்டு வகை இருக்கிறது. 1. தேவையான சிந்தனை, 2. தேவையற்ற சிந்தனை. தேவையில்லாத சிந்தனைகள் நம்மை ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். ஆனால் தேவையான சிந்தனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முயற்சி எடுத்து செய்ய வைக்கும். தேவையான சிந்தனைகளை அதிகமாக சிந்திக்கும்போது செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். என்னென்ன செய்யவேண்டும் என்று குழம்பாமல். அதை ஒரு பட்டியலிட்டு அதன்படி நம்முடைய சிந்தனைகளை சீராக்க முடியும்.
- Don’t Live With Regret And Never Look Back – முன்பு நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மால் அடுத்த விஷயங்களை சிந்திக்க முடியாது. முன்னாடி நடந்த விஷயங்களை யோசித்தால் நேரம் தான் வீணாகும் அவற்றை கடந்து நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம் சிந்தனைகளும் சீராகும்.
- Inner Calm – உங்களுக்குள் நீங்கள் அமைதியை தேடுங்கள். அதற்கு அதிகமான முயற்சிகள் இன்றி எளிமையான முறையில் அமைதியை தேடுங்கள். மனதளவில் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு சிறந்த செயல் தியானம் செய்வது இதன் மூலம் நம்முடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடியும். மேலும் நம்முடைய மனதையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
- Think Beyond Yourself – பிரக்மாடிஸம் என்னும் கருத்தியல்தான் ஆர்தர் டேரியஸை இந்த புத்தகம் எழுத வைத்திருக்கிறது. பிரக்மாடிஸம் என்பது ஒரு பிரச்சனையை முறையாக வழியில் சரி செய்ய வேண்டும். நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதுதான் பிரக்மாடிஸம். நம்மையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். இந்த 20 கருத்துக்கள் மட்டுமின்றி இன்னும் இந்த புத்தகத்தில் நிறைய கருத்துக்கள் இருக்கிறது. ஆர்தர் டேரியர்ஸ் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சிந்தனைகளை ஒழுங்குப்படுத்த கண்டிப்பாக உதவும். நம்முடைய வாழ்விலும் நடைமுறையில் ஒப்பிட்டு வாழ்வதற்கான வழிமுறைகளைத்தான் ஆர்தர் டேரி இந்த புத்தகத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார்.








