Gistak Media – Cinema News | Trending News | Latest News

Thiruchitrambalam 1 Year Celebration : திருச்சிற்றம்பலம் குழுவினரை சந்தித்த தனுஷ்...

Thiruchitrambalam 1 Year Celebration :

திருச்சிற்றம்பலத்தை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுவதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார் தனுஷ். மித்ரன் கே.ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராதா உள்ளிட்டோர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் (19.08.2023) அன்று ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஏற்கனவே தனுஷ்-மித்ரன் கே.ஜவகர் நடிப்பில் நயன்தாரா, ரகுவரன் நடித்த யாரடி நீ மோகினி படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. தனுஷ் மற்றும் மித்ரன் கூட்டணியில் இணைந்த அனிருத்தும் படத்திற்கு மேலும் வலு சேர்த்தார். படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் பின்னணி இசையையும் ரசனையையும் தாண்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் கதாநாயகிகளாக நடித்திருந்தாலும், தனுஷ் இறுதியாக தனது தோழியான நித்யா மேனனையே கரம்பிடிக்கிறார்.

Thiruchitrambalam 1 Year Celebration : எதார்த்தமான கதை, இயல்பான நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல், தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதில் அசத்துவார் தனுஷ். நித்யா மேனன், பாரதிராஜாவும் நடிப்பில் உச்சத்தை காட்டுவார்கள். தனுஷ்-நித்யா மேனன் கூட்டணியை பார்த்த ரசிகர்கள், இவர்களை வேறு படத்தில் பார்க்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் ஓராண்டை நிறைவு செய்திருக்கும் திருச்சிற்றம்பலத்தை (Thiruchitrambalam 1 Year Celebration) கொண்டாடும் வகையில் திருச்சிற்றம்பலம் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், தினமும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிப்பது போன்ற தருணத்தை இழக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top