Thug Life Movie Review : கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் திரை விமர்சனம்
இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று (Thug Life Movie Review) வருகிறது. மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகளுக்கு முன் ‘நாயகன்’ படம் வெளியாகி இருந்தது. தற்போது மீண்டும் தக் லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். மேலும் கமல்ஹாசனுடன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் அதிகாலை முதலே ‘தக் லைஃப்’ படம் வெளியாகி உள்ளது. Thug Life படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்துள்ள ரிவியூக்கள் பற்றி பார்க்கலாம்.
தக் லைஃப் ரிவ்யூ (Thug Life Movie Review)
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், சிம்பு (சிலம்பரசன்) கமல்ஹாசனின் நடிப்புக்கு இணையாகவும், சில இடங்களில் அதை மிஞ்சும் வகையிலும் நடித்துள்ளதாகவும் பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளில், சிம்புவின் உணர்ச்சிகளும், தீவிரமான நடிப்பும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் “சிம்பு இந்தப் படத்தை தனது தோள்களில் சுமந்துள்ளார்” எனவும், கமல்ஹாசன் போன்ற ஹீரோவுடன் நடிக்கும்போது தனித்து தெரிவது என்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் சிம்பு அதைச் சாதித்துள்ளார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக Thug Life ‘மாஸ் என்டர்டெயினர் படம்’ என படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
படம் எப்படி இருக்கு
Thug Life படத்தை பார்த்த ரசிகர்கள், ஒட்டுமொத்தமாக படம் நல்ல அனுபவமாக இருப்பதாகவும், படத்தின் ஆரம்பம் சற்று மெதுவாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இடைவேளைக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பாடத்திற்கு பெரும் பாராட்டு (Thug Life Movie Review) கிடைத்துள்ளது. இது பார்ப்பவர்களை கட்டிப்போடும் வகையிலும், படத்தின் முதல் பாதியில் இருந்த தொய்வை இரண்டாம் பாதி சரிசெய்துவிட்டதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஒளிப்பதிவிற்கு குவியும் பாராட்டு
Thug Life படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு, ஏற்றபடி ஒவ்வொரு காட்சியும் நன்கு திட்டமிடப்பட்டு திரையில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது என ஒளிப்பதிவிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் மனநிலைக்கு மிக கச்சிதமாக பொருந்துவதாகவும் பாராட்டி வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!