Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் (Thug Life Trailer) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தக் லைஃப்
இயக்குநர் மணிரத்னத்தின் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகள் நிலவுவது உண்டு. அவரது இயக்கத்தில் கடைசி படமாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இந்தப் படத்தில் இணைவதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. குறிப்பாக, கமல்ஹாசனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார், அதேநேரத்தில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், சான்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது.
தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் (Thug Life Trailer)
இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை (Thug Life Trailer) பெற்று வருகிறது. வழக்கம் போல இந்த ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் இந்த கதையை கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த ட்ரெய்லரில் சிறு வயதிலேயே கமல்ஹாசனின் உயிரை சிம்பு காப்பாற்றுகிறார். அதற்காக கமல்ஹாசன் சிம்புவை தனது சொந்த குழந்தையாக வளர்க்கிறார், ஒரு கட்டத்தில் கமல் உள்ளே இருப்பதை நான் பார்த்து கொள்கிறேன், வெளியே அமர் கவனித்துக்கொள்வார் என்று அவர் கூறும்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது.
கமலின் இடத்தைப் பிடிக்க சிம்பு போராடும்போது, சிம்புவே கமலின் எதிரியாக மாறுகிறார், அவர் வளர்த்த குழந்தையைச் சுற்றி நடக்கும் கதை இது. இந்த கேங் ஸ்டார் சண்டையில் யார் ஜெயிக்கிறார்? என்பதே இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல், நாயகன் பட லுக்கிலும் கமல் வருவதால், இது நாயகன் படக் கதையின் தொடர்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோல், விக்ரம் படத்தைப் போலவே இந்தப் படமும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!