Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக அனைத்து கீரைகளும் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஒவ்வொரு கீரைக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு என்று பண்டைய சித்த மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் சரியான முறையில் கீரைகளை (Thuthikkeerai Benefits In Tamil) பயன்படுத்தினால் நல்ல திடமான உடல் நலமும், ஆரோக்கியமும் பெறலாம். இந்த பதிவில் துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
துத்திக்கீரை நன்மைகள் (Thuthikkeerai Benefits In Tamil)
உடல் உஷ்ணம் குறைய
துத்திக்கீரை எப்போதும் உடம்புக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடம்பில் அதீத உஷ்ணக்கோளாறுகள் இருந்தால் துத்தி இலைகளை சுத்தம் செய்து பொடிப்பொடியாக தூள் செய்து, சுத்தமான பசும்பாலில் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் உஷ்ண கட்டிகள், புண், போன்றவை விரைவில் ஆறிவிடும். மேலும் துத்தி இலையை அதில் வரும் சாறை (சாறு) காலை வேலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய் கட்டுக்குள் வரும்.
மலட்டுத்தன்மை
இன்றைய சமூகத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை என்றால் அது மலட்டுத்தன்மை தான். இந்த மலட்டுத்தன்மை சிக்கலுக்கு துத்திப்பூக்கள் உதவுகிறது. ஒரு கைப்பிடி அளவு துத்திப் பூவை எடுத்து அதை பசும்பாலுடன் (Thuthikkeerai Benefits In Tamil) சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், உடலில் வெப்பம் தணிந்து ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும் தாது விருத்தியும், விந்து உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.
கருப்பை கோளாறுகள்
துத்தி இலையை மிதமான சூட்டில், நெய்யில் வதக்கி வெள்ளை சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு பிரச்சனை நீங்கும். மேலும் பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதல் இருந்தால், இந்த துத்திக்கீரை விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
எலும்பு முறிவு
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இந்த துத்தி இலையை அரைத்து நாட்டு துணியால் கட்டுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு விரைவாக கூடிவரும். மேலும் இந்த துத்தி இலையை ரசம் வைத்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, குடல்புண்கள் மற்றும் வாயு வியாதிகள், சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!