-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன்பயன்பாட்டால்அதிகரிக்கும்டோப்பமைன்.. மருத்துவர்கள்எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Thuthuvalai Benefits In Tamil : தூதுவளை பயன்கள் மற்றும் 12 மருத்துவ குணங்கள்
தூதுவளை (ஆடாதோடை) என்பது உடலை பாதுகாக்கும் காயகல்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் (Thuthuvalai Benefits In Tamil) கூறப்படுகிறது. இது நவீன மருத்துவத்தில் ஆன்டி ஆக்சிடண்ட் மூலிகை என்றும் அழைக்கப் படுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துகள் ஏராளம் இந்த மூலிகையில் வைட்டமின்கள், மினரல்கள், தாது உப்புகள், பிளவனாய்ஸ், ஆல்கலாய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடண்ட் குணங்கள் அதிகம் நிறைந்துள்ளன.
இம்மூலிகையில் பேக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது. இந்த மூலிகையை ரசமாகவோ, துவையலாகவோ, சாறாகவோ, சூப் போன்றோ, பொடியாகவோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் அனைத்து பாகங்களும் மிகவும் மருத்துவ குணங்களை கொண்டது. தலை முதல் கால் வரை காக்கும் சிறந்த மூலிகையாக இது கருதப்படுகிறது. இந்த தூதுவளையின் முக்கிய நன்மைகள் என்னவென்று பின்வருமாறு காண்போம்.
தூதுவளை பயன்கள் (Thuthuvalai Benefits In Tamil)
- தொண்டை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு தர கூடியது. தூதுவளை இலை எடுத்து சிறிதளவு எடுத்து மிளகு சேர்த்து கசாயமாகவோ அல்லது சாறாகவோ தினமும் காலை மாலை (Thuthuvalai Benefits In Tamil) வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் தொடையில் உள்ள தொற்று, குரல் மங்குதல், சதை வளர்ச்சி, தொண்டை கரகரப்பு, தைராய்டு பிரச்சனைகள் குறைந்து தொண்டை பகுதியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- ஆடாதோடை இலைகளை அரைத்து அதனுடன் சுக்கு பொடி கலந்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி, ஒற்றை தலைவலி குணமாகும்.
- நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை இலைகள், ஆடாதோடை இலைகள் சிரித்தளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு சேர்த்து கசாயமாக செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை இரு வேலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரலில் சேரும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும், சுவாச மண்டலம் பலம் அடையும் ஆஸ்துமா காசநோய், நாள் பட்ட நெஞ்சு சளி போன்ற பாதிப்புகள் நீங்கும்.தற்காலிகமாக இருக்கும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனைகள் குணமாகும் வரை எடுத்து கொள்ளலாம். இதை பொடியாக பயன்படுத்தினால் (Thuthuvalai Benefits In Tamil) ஆடாதோடை பொடி கால் தேக்கரண்டி அளவு, தூதுவளை பொடி கால் தேக்கரண்டி அளவு பயன்படுத்தலாம்.
- ஆடாதோடை இலையை மற்ற கீரைகளை போலவே உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு மூட்டுகளை பலப்படுத்த உதவும். பற்களுக்கும் நல்லது.
- சர்க்கரை நோய் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகளுடன் இந்த மூலிகையை தினமும் கசாயமாகவோ, பொடியாகவோ அல்லது மற்ற மூலிகையுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளையும், உடல் பலவீனத்தையும் குணப்படுத்தும்.
- இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகலில் இந்த தூதுவளையும் மிக சிறந்தது. இதன் கசாயம் சாறு அல்லது பொடியை ஒரு மண்டலம் பயன்படுத்தி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் படிப் படியாக நீங்கி இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும். தூதுவளை பொடியை தேன் அல்லது மோரில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.
- உடலில் உள்ள நரம்புகளுக்கு வலுஊட்டக்கூடியது இம்மூலிகை, இம்மூலிகையை அடிக்கடி சேர்த்துவரும்போது (Thuthuvalai Benefits In Tamil) நரம்பு பலவீனம், ஆண்மை குறைபாடு நீங்கும்.
- மூளை பகுதிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மூளையின் செயல் திறனை அதிகரிக்க ஆடாதோடை மிகச்சிறந்தது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நினைவாற்றல், புத்தி கூர்மை அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும், கண் பார்வை திறன் அதிகரிக்கும், கண்கள் ஒளி பெரும்.
- ஆடாதோடை இலை சாறை காதில் சீழ் வடிதல், காது வலி போன்ற பிரட்சனைகளுக்கு காதில் தினமும் இரண்டு துளிகள் விட்டுவர குணமாகும்.
- தூதுவளை மூலிகையுடன் சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து கசாயமாக தினமும் அருந்தி வந்தால் வாய்வு பிரட்சனை, வயிற்று பொருமல், செரிமான கோளாறுகள், பசி இன்மை நீங்கும்.
- குழந்தைப் பெற்ற பெண்கள் இந்த ஆடாதோடை இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- புற்றுநோய் வராமல் தடுப்பதில் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையாக தூதுவளை பயன்படுகிறது. இதிலுள்ள சிறந்த ஆன்டி ஆக்சிடண்ட் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுத்து தொண்டை, நுரையீரல் தொடர்பான புற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன்பயன்பாட்டால்அதிகரிக்கும்டோப்பமைன்.. மருத்துவர்கள்எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!