அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த தூதுவளை கீரை தென்னிந்தியாவில் பரவலாகவும் குறிப்பாக இந்தியா, இலங்கை, மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இவை வெள்ளை மஞ்சள் நிறம் கொண்ட (Thuthuvalai Benefits) பூக்களையும் மற்றும் முள் வடிவம் கொண்ட இலைகளையும் கொண்ட கொடியாகும். இக்கீரையின் இலைகள், காய்கள், மற்றும் வேர்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த மூலிகை தூதுவளை கீரை (Solanum trilobatum) ஆனது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுவாச நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது
இருமல், சளி, ஆஸ்துமா, காமாலை, காசநோய், இரைப்பு, மார்பு அழுத்தம் மற்றும் சைனஸ் போன்ற சுவாச நோய்களால் அவதி படுபவர்களுக்கு இந்த மூலிகைக் கீரையை வதக்கி சாப்பிட அல்லது கஷாயம் குடிப்பதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. மேலும் குழந்தைகளின் கக்குவான் இருமலுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இந்த மூலிகைக் கீரையை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸை குறைக்கும் தன்மையுள்ள SOD, CAT, GPx போன்ற என்ஸைம்கள் அதிகரிக்கின்றன. இந்த என்ஸைம்கள் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி தொற்றுகளைத் தடுக்கும். தூதுவளை கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் (Thuthuvalai Benefits) உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி, உடலுக்குள் ஏற்படும் அழற்சிகளை குறைக்கின்றன.
கல்லீரல் சேதத்தை சரிசெய்யும்
இந்த மூலிகைக் கீரை கல்லீரலுக்கு சிறந்த பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் TAA தூண்டிய கல்லீரல் சேதத்தை சரிசெய்யும் வல்லமை பெற்றது. TBARS குறைக்கிறது, GSH அதிகரிக்கிறது மற்றும் ஹெபடோடாக்ஸிஸிட்டியைத் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் (Thuthuvalai Benefits)
இந்த மூலிகைக் கீரை ஆனது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வல்லமை பெற்றுள்ளதால் சிறந்த சர்க்கரை நோய் கட்டுப்பாட்டை தருகிறது மற்றும் நீரிழிவுக்கு உதகிறது. இந்த மூலிகைக் கீரையின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் டயாபெட்டிஸ் மேனேஜ்மென்ட்டில் பயன்படுகிறது.
எலும்புகளை வலுப்படுத்த மற்றும் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது
இந்த மூலிகைக் கீரையின் இலைகளில் கால்சியம், இரும்பு, விட்டமின் C, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (பிளேவனாய்டுகள், ஃபினால்கள்) நிறைந்து உள்ளன. இந்த இலைகள் எலும்புகளை (Thuthuvalai Benefits) வலுப்படுத்தவும், மற்றும் இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகின்றன.
அஜீரணம் மற்றும் வயிறு மந்தம் தீர்க்க வல்லது
இந்த மூலிகைக் கீரையின் இலைகளை அரைத்து அடை செய்து உண்பதன் மூலம் அஜீரணம் மற்றும் வயிறு போன்ற உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
கண் மற்றும் காது நோய்களை தீர்க்க வல்லது
இந்த மூலிகைக் கீரையின் இலைகளின் மூலம் தயாரிக்கப்படும் ஊறுகாய் மற்றும் வற்றல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் கண் நோய், கண் எரிச்சல், காது மந்தம் போன்ற உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம்.
பித்த நீர் அதிகரிப்பை குறைக்கும்
இந்த மூலிகைக் கீரையின் இலைகளை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் பித்த நீர் அதிகரிப்பை குறைத்து கட்டுப்பாட்டில் வைக்கலாம்.