Gistak Media

Tilak Varma: T20 போட்டியில் திலக் வர்மா அறிமுக வீரராக களம் இறங்கினார்...

Tilak Varma அறிமுகம் :

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் டி20 போட்டியில் Tilak Varma அறிமுக வீரராக களம் இறங்கினார். இதில் ஆரம்பித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அட்டகாசமாக தன்னுடைய சர்வதேச போட்டியை துவங்கினார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. துரதிஷ்டவசமாக இந்திய அணி இந்த போட்டியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரவீஸ் வெளியிட்ட வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களில் மிகவும் முக்கிய இளம் வீரர்கள் Tilak Varma மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ். இந்த இரண்டு வீரர்களையும் ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பெரும் போட்டி போட்டன. ஆனால் இந்த இரண்டு வீரர்களையுமே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் தொடரின் இந்த இரண்டு பெரிய அணிகளுமே இவர்களை வாங்கும் முயன்றதால் இவர்களின் மேல் பெரிய எதிர்பார்ப்பு அதிகமானது.

இருவருமே ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர். குறிப்பாக திலக் வருமா எந்த பெரிய பந்துவீச்சாளருக்கும் பயப்படாமல் விளையாடுவார். இது மட்டுமல்லாமல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, Tilak Varma இந்தியாவின் ஒரு தலை சிறந்த வீரராக வருவார் என்று கூறியிருந்தார். இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரின் போது சகோதரர்கள் போன்று நெருக்கமாக இருந்தனர்.

ஆனந்தத்தில் குட்டி ABD :

இதனை நிரூபிக்கும் வகையில் தற்போது நடந்த சர்வதேச போட்டியில் அறிமுகமான திலக் வர்மாவிற்கு டெவால்ட் ப்ரீவிஸ் அவரது குடும்பம் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவில் உன் பெற்றோர்கள் உன்னை நினைத்து எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

உன்னுடைய கனவை நீ அடைந்ததை எண்ணி பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். இதிலும் நீ இரண்டு சிக்ஸர்களை அடித்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. இவ்வாறு ஆனந்தம் அடைந்த டெவால்ட் ப்ரீவிஸ் அவருக்கு Tilak Varma நன்றி கூறினார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top