Tiruvannamalai Karthigai Deepam 2025 : கார்த்திகை தீபத் திருவிழா- வழிகாட்டு நெறிமுறைகள்!!
நமது புராண கதைகளின் படி, மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி (Tiruvannamalai Karthigai Deepam 2025) வடிவமாக சிவபெருமான் காட்சி அளித்த திருநாள் ஆனது திருக்கார்த்திகை தீபத் திருநாள் என சொல்லப்படுகிறது. இது தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு முக்கியமான திருநாள் ஆகும்.
யார் பெரியவன் என்ற வாக்கு வாதம்
ஒரு முறை படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கும் மற்றும் காத்தல் தொழிலைச் செய்யும் மகாவிஷ்ணுவிற்கும் இடையே தங்களில் யார் பெரியவன் என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதம் பல ஆண்டுகள் நீடித்தது. அவர்கள் இருவரும் சிவபெருமானிடம் முறையிட்டு நீதி கேட்க நாடினர். அவர்கள் இருவர் முன்பாக சோதிப்பிழம்பாகத் தோன்றிய சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடும்படி ஒரு அசரீரி ஒலித்தது.
சோதியை அனைவரும் காணும்படி கோரிக்கை (Tiruvannamalai Karthigai Deepam 2025)
அவர்கள் இருவரும் சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிக் காணமுடியாத நிலையில் சிவபெருமானே பெரியவன் மற்றும் முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்கள் இருவரும் தாங்கள் கண்டு மகிழ்ந்த சோதியை உலகில் உள்ள மக்கள் அனைவரும் காணும்படி காட்டி அருள் புரிய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தனர். சிவபெருமான் அவர்கள் இருவரின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகை நாளன்று உலகில் உள்ள மக்கள் அனைவரும் காணும்படி சோதி சொரூபமாக காட்சியளித்து வருகிறார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே திருக்கார்த்திகை வழிபாடு மற்றும் விளக்கீடு என்று கூறப்படுகிறது.
மலை மீது கார்த்திகை மகாதீபம்
ஒவ்வொரு ஆண்டும் சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்ததை நினைவுபடுத்தும் விதமாக திருவண்ணாமலையில் உள்ள மலை மீது கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். இம்மலை மீது இந்த கார்த்திகை தீபம் ஏற்ற செம்பு மற்றும் இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையை பயன்படுத்துவர். இத்தீபம் ஏற்றச் சுமார் 3000 கிலோவிற்கும் மேற்பட்ட நெய்யும் மற்றும் 1000 மீட்டர் காட துணியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.
இல்லங்களில் டிசம்பர் 3 அன்று மகா தீபம் ஏற்றப்படும்
இந்த கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24, 2025 முதல் டிசம்பர் 3, 2025 வரை கொண்டாடப்பட உள்ளது. தமிழர்கள் கார்த்திகை திருநாளின் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும் மற்றும் வீட்டு முற்றங்களிலும் விளக்கேற்றிக் (Tiruvannamalai Karthigai Deepam 2025) கொண்டாடுவார்கள். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்க விடுவர். மேலும் கோவில்களுக்கு சென்றும் விளக்கிடுவர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!