TN Bond Registration Income In Akshaya Tritiya : அட்சய திருதியை நாளில் பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு 273 கோடி வருவாய் கிடைத்துள்ளது
கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 10.2.2025 அன்று ஒரே நாளில் 23421 பத்திரப்பதிவு பதிவு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு ரூ.237 கோடி வருவாய் கிடைத்திருந்தது. ஆனால் 2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ‘அட்சய திருதியை’ நாளில் சுமார் 27440 பத்திரப்பதிவு பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் தமிழக அரசுக்கு ரூ.273 கோடி வருவாய் (TN Bond Registration Income In Akshaya Tritiya) கிடைத்துள்ளது. அட்சய திரிதியை நாளில் பத்திரப்பதிவு துறையின் சாதனை குறித்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு 57 பத்திரங்கள் பதிவு (TN Bond Registration Income In Akshaya Tritiya)
அட்சய திருதியை நாளான நேற்று தமிழக பதிவுத்துறையில் சராசரியாக 1 நிமிடத்திற்கு 57 பத்திரங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் 1 நிமிடத்திற்கு 57 லட்சம் என்ற அளவில் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் (TN Bond Registration Income In Akshaya Tritiya) சுப முகூர்த்த நாளில் பத்திரப்பதிவுகள் அதிகமாக பதிவுசெய்யப்படுவதால், அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதலாக 50 முதல் 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று அட்சய திருதியை நாளில் கூடுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அட்சய திருதியை முன்னிட்டு 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக, 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக, 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பத்திரப்பதிவு (TN Bond Registration Income In Akshaya Tritiya) துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் அட்சய திருதியை நாளில் பதிவுத்துறை கடந்த 2024-25-ம் நிதியாண்டின் அதிகபட்ச வசூல் சாதனையான ரூ.237 கோடியை முறியடித்து, 1 நாள் வருவாயாக ரூ.273 கோடி வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!