TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு (TN Cabinet Approves Space Industry Policy 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து, 10000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் (TN Cabinet Approves Space Industry Policy 2025)
கடந்த மார்ச் மாதம் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை (TN Cabinet Approves Space Industry Policy 2025) நடைபெறுகிறது. முன்னதாக, தமிழக அரசின் புதிய திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் எப்போதும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக புதிய தொழில் பிரிவுகளில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பங்களில் நாம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். இதற்காக தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை (TN Cabinet Approves Space Industry Policy 2025) உருவாக்குவதும் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் திறமையான, தகுதியான நபர்களை உருவாக்குவதும் இதன் இலக்காகும்.
செயற்கை நுண்ணறிவு விண்வெளி தொழில்நுட்பம்
தற்போது உலகில் செயற்கை நுண்ணறி விண்வெளி தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறையில் முக்கிய அம்சமாக ரூ.25 கோடி முதலீடு கொண்ட சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக சென்னையில் (TN Cabinet Approves Space Industry Policy 2025) ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த புதிய விண்வெளி தொழில் கொள்கை 2025 உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்புரிமை பெறுவதற்கு 50% சலுகை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ரூ.300 கோடிக்கு அதிகமான முதலீடுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் உலக அளவில் தொழில்முனைவோர் தமிழகத்தை நோக்கி வருவார்கள். மேலும் விண்வெளி தொழில்நுட்பத்தை சேர்ந்த பல தொழில்கள் தமிழகத்தை நோக்கி அதிக அளவில் படையெடுக்கும். குறிப்பாக குலசேகரப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு (TN Cabinet Approves Space Industry Policy 2025) இது மிகப்பெரிய நல்வாய்ப்பாக இருக்கும். தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விண்வெளி தொழி்ல்நுட்பம் சார்ந்த தொழி்ல்கள் மிகப்பெரிய அளவில் வரும். இவ்வாறு செய்தியாளர்களிடம் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார்.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு