TN Home Guard Recruitment 2024 : சென்னையில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்கள்
TN Home Guard Recruitment 2024 :
சென்னை பெருநகர ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் ஒரு தன்னார்வ படையாகும். சென்னையின் பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய (TN Home Guard Recruitment 2024) ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆனது வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 22/01/2024 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆனது வரவேற்கப்படுகின்றன. 22/01/2024 காலை முதல் 10/02/2024 மாலை 05.00 மணி வரை (TN Home Guard Recruitment 2024) விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
- சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி ஆனது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தவறியவர்கள்
- நன்னடத்தை உள்ளவர்களாக மற்றும் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
- சென்னை பெருநகர காவலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
- குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்.
தேர்ச்சி செய்யப்படும் முறை
- தேர்ச்சி பெறும் ஊர்க்காவல் படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
- பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அவர்கள் அனுப்பப்படுவர்.
- சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை தேர்ச்சி பெறும் ஊர்க்காவல் படையினர்களுக்கு வழங்கப்படும்.
- இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/- வழங்கப்படும்/பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே.
- சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த ஊர்க்காவல் படையினர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (TN Home Guard Recruitment 2024) விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 22.01.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து 10.02.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
முகவரி
சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15
தொடர்பு எண்: 9498135190/9566776222
சேவை மனம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் யாவரும் ஊர்க்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!