வழக்கமாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் எப்பொழுதும் பிப்ரவரி–மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் 17.02.2026 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் (TN Interim Budget 2026-27) செய்யப்பட்டது. இது தமிழக அரசின் வரும் 4 மாதங்களுக்கான (ஏப்ரல் 2026 – ஜூலை 2026) அடிப்படை செலவுகளை உறுதி செய்கிறது. தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஆனது தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளியாகும்.
2026-27ஆண்டின் இடைக்கால பட்ஜெட்
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தமிழ்நாட்டை ஆண்டு வரும் அரசின் பதவிக்காலம் வரும் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளால் மாற்றம் காணலாம் என்பதால் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதாக 17.02.2026 அன்று அறிவித்தார். இது தேர்தல் ஆண்டு என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதும் சேர்க்காமல் ஏற்கனவே உள்ளத் திட்டங்களுக்கான (TN Interim Budget 2026-27) பட்ஜெட் அறிவிப்பாக உள்ளது. இந்த 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி, சிறப்பு திட்ட செயலாக்கம், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில், தகவல் தொழில்நுட்பம், நெடுஞ்சாலை, ஆதி திராவிடர் நலன், சுற்றுலா, கால்நடை, மீன்பிடித்தல், நீர்வளம், எரிசக்தி, மின்சாரம், உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? (TN Interim Budget 2026-27)
இந்த இடைக்கால பட்ஜெட்டில் கல்வி, சமூக நலம், மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொத்தம் ₹10,62,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் கல்வி, சமூக நலம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி கல்வித் துறைக்கு 48,534 கோடி ஒதுக்கீடு.
- ஊரக வளர்ச்சித்துறைக்கு 28,687 கோடி ஒதுக்கீடு.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1,471 கோடி ஒதுக்கீடு.
- சுற்றுலாத் துறைக்கு 1,394 கோடி ஒதுக்கீடு.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு 718 கோடி ஒதுக்கீடு.
- கிராம சாலைகள் திட்டங்களுக்கு 8,911 கோடி ஒதுக்கீடு.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.41 லட்சம் கோடி கடன் ஒதுக்கீடு.
- மருத்துவத் துறைக்கு 22,090 கோடி ஒதுக்கீடு.
- தொழிலாளர் நலத் துறைக்கு 1,996 கோடி ஒதுக்கீடு.
- அரசு ஊழியர்கள் நலன் திட்டங்களுக்கு 11,000 கோடி ஒதுக்கீடு.
- உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு 15,111 கோடி ஒதுக்கீடு.
- செமி கண்டக்டர் திட்டங்களுக்கு 500 கோடி ஒதுக்கீடு.
- போக்குவரத்து துறைக்கு 13,062 கோடி ஒதுக்கீடு.
- மனிதவள மேலாண்மைத் துறைக்கு 1,55,977 கோடி ஒதுக்கீடு.
இந்த இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் ரூ.3,44,575 கோடி எனவும், மற்றும் செலவு ரூ.3,93,272 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கருத்து
இந்த 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆனது தமிழக அரசின் சமூகநலக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகிறது. ஆனால் பொருளாதார ரீதியாக 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆனது “செலவு – வருவாய் – கடன்”என்ற மூன்று கோணங்களின் (TN Interim Budget 2026-27) சமநிலை தான் தமிழக மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை தீர்மானிக்கும். அவை உற்பத்தி திறனை உயர்த்தும் திட்டங்களுடன் முறையாக இணைக்கப்பட வேண்டும். உற்பத்தி துறை (Manufacturing) ஊக்குவிப்பு மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் இவற்றில் அதிக கவனம் தேவை.