TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
GER என்பது குறிப்பிட்ட மக்கள் தொகைக்குள் உயர்கல்வியில் பங்கேற்பு அளவைக் காட்டும் ஒரு முக்கிய குறிகாட்டி ஆகும். GER-ன் அதிக மதிப்பெண் ஆனது குறிப்பிட்ட வயது மாணவர்களிடையே உயர்கல்வியில் அதிக சேர்க்கையைக் குறிக்கும். கல்வி அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின்படி (AISHE) தமிழ்நாடு 47% GER உடன் (TN Leads In Higher Education) முன்னணியில் உள்ளது.
கல்வி அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது 18 முதல் 23 வயது வரையிலான தகுதியுள்ள மக்கள்தொகையில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டது ஆகும். இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான PHD படிப்புகளில் சேருபவர்களை கொண்டுள்ளது. தேசிய சராசரியான 28.4-ஐ விட அதிகமாக தமிழ்நாடு 47% GER உடன் முன்னணியில் உள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் GER வளர்ச்சி ஆனது 42% ஆக இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகரித்து உள்ளது. இந்த சேர்க்கை விகிதம் அதிகரிப்பானது மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்ற ஒரு முன்மாதிரியாகும்.
தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்திய இலவச பள்ளி அத்தியாவசியப் பொருட்கள், மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் விநியோகம் போன்ற பல்வேறு திட்டங்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில பள்ளிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் 1950-களின் பிற்பகுதியில் தொடங்கி நிலையான எண்ணிக்கையில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருகின்றன. கடந்த 2017-2022-க்கு இடையில் உள்ள 5 கல்வி ஆண்டுகளில் தமிழ்நாடு உயர்கல்வியில் (கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) தொடர்ந்து மிக உயர்ந்த சேர்க்கை விகிதத்தை (GER) பராமரித்து வருகிறது.
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அறிக்கை (TN Leads In Higher Education)
AISHE அறிக்கையின்படி, அதிக மாணவர் சேர்க்கை கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் பின்வருமாறு
முதலிடம் – உத்தரப் பிரதேசம் 69.73 லட்சம் மாணவர்கள்,
இரண்டாமிடம் – மகாராஷ்டிரா 45.78 லட்சம் மாணவர்கள்,
மூன்றாமிடம் – தமிழ்நாடு 33.09 லட்சம் மாணவர்கள்.
இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (28 லட்சம் மாணவர்கள்), மேற்கு வங்கம் (27.22 லட்சம் மாணவர்கள்) மற்றும் ராஜஸ்தான் (26.89 லட்சம் மாணவர்கள்) என்ற வரிசையில் உள்ளன. அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் உயர்கல்வியைத் தொடரும் இளைஞர்களின் மிகக் குறைந்த விகிதத்தையே கொண்டுள்ளன.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!