TN MRB Recruitment 2025 : தமிழக அரசில் 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!
தமிழக அரசின் சுகாதாரத் துறை ஆனது 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணியாளர் தேர்வுக்கான ஒரு மெகா (TN MRB Recruitment 2025) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவத்துறையின் இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள ஆண்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையில் நேரடி முறையில் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் 16.11.2025 வரை வரவேற்கப்படும்.
பதவி விவரம் – சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II)
மொத்தமாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை – 1429 Nos.
ஊதிய விவரம் – மாத ஊதியம் ₹19,500 முதல் ₹71,900 வரை.
கல்வித் தகுதி (TN MRB Recruitment 2025)
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் கட்டாயமாக தமிழ் பாடத்தை படித்தவர்களாக இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் விண்ணப்பதாரர்கள் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும் 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் பாடநெறி (Multipurpose Health Worker (Male)/Health Inspector/Sanitary Inspector Course) சான்றிதழை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்ந்துதெடுக்கும் முறை
Tamil Language Eligibility Test (SSLC Standard) – இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வு (10 ஆம் வகுப்பு தரத்தில்) ஆனது 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இந்தத் தேர்வு (TN MRB Recruitment 2025) ஆனது ஒரு மணி நேர கால அளவில் நடத்தப்படும்.
Computer Based Test (CBT) for Health Inspector Grade-II (Objective Type) – இந்த கணினி அடிப்படையிலான தேர்வு/எழுத்துத் தேர்வு ஆனது 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படாது. கொரோனா காலத்தில் வேலை பார்த்த விண்ணப்பதாரர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண்கள் ஆனது வழங்கப்படும்.
முதல் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுபவர்களின் இரண்டாம் பகுதி மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது நடத்தப்படும்.
வயது வரம்பு விவரம்
சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் (TN MRB Recruitment 2025) குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு, எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST), எம்.பி.சி (MBC & DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) உள்ளிட்ட எந்த சாதிப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
விண்ணப்ப கட்டண விவரம்
பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Nov 16, 2025 க்குள் mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு வேலைகளில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!