TN Records Double-Digit Economic Growth After 14 Years: தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது
இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு ஆனது பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது. மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3து இடத்தை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு ஆரம்பத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ள வளர்ச்சியை விட உண்மையான வளர்ச்சி ஆனது அதிகமாக உள்ளது. அதாவது மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 14.5% ஆகவும், உண்மையான வளர்ச்சி 9% ஆகவும், மற்றும் சராசரி பணவீக்கம் 5% ஆகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது காணும் உண்மையான வளர்ச்சி ஆனது இந்த ஆண்டு ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 2.2% அதிகமாக உள்ளது.
இந்த 2024-25-ஆம் ஆண்டில் தமிழ்நாடு (TN Records Double-Digit Economic Growth)ஆனது 11.19% வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2011-12ம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு இந்த முக்கிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாநில பொருளாதார வளர்ச்சி:
- தமிழ்நாடு – 11.19%
- உத்தர பிரதேசம் 8.99%
- ஆந்திரா 8.21%
- தெலங்கானா 8.08%
- கர்நாடகா 7.37%
- மகராஷ்டிரா 7.27%
இந்திய நாட்டிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு(TN Records Double-Digit Economic Growth) திகழ்கின்றது.
மாநில GDP அளவில் தனிநபர் வருவாய் :
- தமிழ்நாடு ரூ.3.62 லட்சம்
- கர்நாடகா ரூ.3.81 லட்சம்
- தெலங்கானா ரூ.3.88 லட்சம்
தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மிகப் பெரிய பொருளாதார இலக்கை தமிழ்நாடு ஆனது 2031-2032ம் ஆண்டில் அடைந்துவிடும் என பொருாளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் ரூ.10.63 லட்சம் கோடிக்கு முதலீடுகள் செய்துள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இந்த முதலீடுகள் நடைபெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழல், திறமையான இளைஞர்கள், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்குப் பார்வையோடு செயல் படும் திட்டங்கள் மற்றும் சிறப்பான சட்டம் ஒழுங்கு முறைகள் ஆகியவை சிறப்பான தொழில்வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு(TN Records Double-Digit Economic Growth)தொழில்வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ உதவுகின்றன.
பல்வேறு வெளிநாட்டு கம்பெனிகளும் ( M.N.C-களும்) மற்றும் பிரபலமான இந்திய நிறுவனங்களும் தமிழ்நாட்டையே முதலீடுகள் செய்ய சிறந்த இடமாக தேர்வு செய்கின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!