TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கீழ் உதவியாளராக நியமிக்கப்படும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது நிரப்ப (TN Village Assistant Recruitment 2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்போது வரை விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது, எப்படி தேர்வு நடைபெறும் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
TN Village Assistant Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 2299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10-ம் வகுப்பில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (TN Village Assistant Recruitment 2025) எனவும், கூடுதலாக சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
வருவாய் துறையில் இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு சம்பளமாக மாதம் ரூ.12000 முதல் ரூ.35000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு முதலில் விண்ணப்பதார்களுக்கு திறனறிவு தேர்வு நடத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு (TN Village Assistant Recruitment 2025) வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date)
இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7.செப்டம்பர் 2-ம் தேதி தேர்வு
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 2-ம் தேதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு செப்டம்பர் 17-ம் தேதி முதல் 23-ம் வரை நேர்காணல் நடத்தப்பட்டு, செப்டம்பர் 25-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!