TNEB Field Assistant Recruitment 2025 : தமிழக மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் (TNEB Field Assistant Recruitment 2025) தேர்வு ஆணையமானTNPSC வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய குழுமம் வழங்கும் தொழிற் சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
TNEB Field Assistant Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள ‘கள உதவியாளர்’ (Field Assistant) பணியிடங்களை நிரப்ப அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மொத்தம் 1,794 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த ‘கள உதவியாளர்’ பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தமிழை ஒரு மொழிப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலை மொழித் தேர்வில், தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் இந்த ‘கள உதவியாளர்’ பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் இந்த ‘கள உதவியாளர்’ (Field Assistant) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.18,800/- முதல் ரூ.59,900/- வரை சம்பளம் வழங்கபடுகிறது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த ‘கள உதவியாளர்’ பணியிடங்களுக்கு 30 அடி கம்பத்தில், இடுப்புக் கயிறை முறையாக கட்டிக்கொண்டு மின் கம்பத்தில் கயிற்றின் மறுமுனையினை எடுத்துக்கொண்டு 9 மீட்டர் ஏறவேண்டும். பின் கம்பத்தில் கால் வைப்பதற்கான (TNEB Field Assistant Recruitment 2025) பாதுகாப்பு கட்டையினை கட்டி, அலுமினிய மின் கடத்தியின் உலோக பாகங்களில் (Creeper Set) மற்றும் Disc-ல் முறையாக பொருத்த வேண்டும். மேற்கண்ட செயல்முறையினை 2 நிமிட கால அவகாசத்திற்குள் முடிப்பவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் இந்த ‘கள உதவியாளர்’ பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் ரூ.100 நிர்ணயித்துள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
தமிழ்நாடு மின் வாரியத்தில் இந்த கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 2.10.2025 கடைசி நாளாகும். மேலும் தேர்வானது நவம்பர் 16-ம் தேதி அன்று காலை வேலையில் கட்டாய தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு தேர்வும், பிற்பகலில் மின் பணியாளர் மற்றும் கம்பியாள் தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!