TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும்
தமிழக அரசு ஆனது ஒவ்வொரு வருடமும் அந்தந்த (TNPSC Annual Planner 2026) ஆண்டுக்குரிய பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வாயிலாக அதே ஆண்டுகளில் தேர்வு செய்து வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி ஆனது அடுத்த ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்பதை முன்கூட்டியே வெளியிட்டு வருகின்றது. அதன்படி வரும் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை தயாரிக்கின்ற பணி ஆனது முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் 2026-ம் ஆண்டுக்கான குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது. தமிழக அரசின் tnpscgov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இது குறித்த அட்டவணையை பார்வையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2025-ல் டிஎன்பிஎஸ்சி-யின் 2026 ஆம் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு ஆனது மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவைகளுக்கான கல்வித்தகுதிக்கு ஏற்ப குரூப்-4, 2 தேர்வுகள் நடத்தி டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே நிரப்ப முடிவுசெய்துள்ளது.
இந்த 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணை எப்போது வெளியாகும் (TNPSC Annual Planner 2026)
இந்த 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்வுக்கு தங்களை தயார் செய்யும் ஆர்வலர்களின் நலன் கருதி, டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்பதை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அரசு பணிக்காக காத்து இருக்கும் பல லட்சக்கணக்கான ஆர்வலர்கள் டிஎன்பிஎஸ்சி ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கால அட்டவணைக்கு ஏற்ப ஆர்வலர்கள் திட்டமிட்டு படிக்க தயாராவார்கள். தமிழக அரசு ஆனது தமிழக அரசைச் சார்ந்த பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வாயிலாக தேர்வு செய்யகிறது. தமிழக அரசு துறையில் உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை அலுவலர் என பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சியே நிரப்பி வருகிறது. ஆர்வலர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும் என்பதால், இந்த 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்காக மிகுந்த நம்பிக்கையுடன் ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள். கால அட்டவணைக்கு ஏற்ப ஆர்வலர்கள் திட்டமிட்டு படிக்க தயாராவார்கள். டிசம்பர் 2025-ல் டிஎன்பிஎஸ்சி-யின் 2026 ஆம் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகரனின் அறிக்கை
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பல்வேறு துறைகளிடம் இருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், மேலும் குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும், அதேபோல, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிட எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி வாயிலாக மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லாத பணியிடங்களையும் நிரப்ப அரசு முடிவு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை ஆனது அறிக்கையில் வெளியிடப்படும் என்றும், தேர்வுகளுக்கான பாடத்திட்டம் ஆகியவை தேர்வுத் திட்டம் தேர்வாணையம் இளையதளத்தில் (WWW.tnpscgov.in) வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் அறிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!