TNPSC Exam Group 4 : TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதியை (TNPSC Exam Group 4) அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC Exam Group 4 - TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதியை (TNPSC Exam Group 4) அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 6-ம் தேதி தேர்வு நடைபெறும். இதன் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 28.02.2024 இரவு 11.59 மணி வரை TNPSC (www.tnpsc.gov.in, www.tnpscexams.in) என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப சரிபார்ப்பு தேதி 04.03.2024 அன்று அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 வரை சரிபார்க்கலாம்.
தேர்வு விவரங்கள் :
வழக்கமாக இந்த (TNPSC) தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் இந்த ஆண்டு பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வேலை மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள்,ஜூனியர் அசிஸ்டெண்ட், டைபிஸ்ட், தனி உதவியாளர், பில் கலெக்டர், வனப் பாதுகாவலர், வனக் கண்காணிப்பாளர் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வானது ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான வினாத்தாள் 10ம் வகுப்பின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக தயாரிக்கப்படும். தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர 75 பொது கேள்விகளும், இவை தவிர 25 திறன் கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். அதற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. OMR எனப்படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதேபோல், கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்களை மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெறும் 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கட்டணச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
எச்சரிக்கை :
TNPSC Exam Group 4 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானவை. நியாயமற்ற வழிகளில் வேலைகளைப் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து முகவர்கள் ஏமாற்றலாம். இத்தகைய நேர்மையற்ற கூறுகளுடன் எந்தவொரு பரிவர்த்தனைகளாலும் ஏற்படும் பண இழப்புக்கு TNPSC பொறுப்பேற்காது. ஆன்லைன் விண்ணப்பத்தில் செய்யப்படும் உரிமைகோரல்களுக்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே பொறுப்பு. பிரவுசிங் சென்டர் மற்றும் பொது சேவை மையங்கள் போன்ற சேவை வழங்குநர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகளுக்கு குற்றம் சாட்ட முடியாது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை இறுதி சமர்ப்பிப்புக்கு முன் சரிபார்க்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!