Gistak Media – Cinema News | Trending News | Latest News

TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!

டிஎன்பிஎஸ்சி (Tamil Nadu Public Service Commission) ஆனது அரசு நிர்வாகம், உதவி கணக்காளர், உதவி பதிவாளர் போன்ற பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பயன்படுத்தப்படும் தேர்வுகள் ஆகும். தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக  தமிழகம் முழுவதும் பிப்ரவரி 8, 2026 அன்று நடைபெற (TNPSC Group 2 & 2A Exam Postponed) இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது நிர்வாக அலட்சியம் மற்றும் போதிய முன்னெச்சரிக்கை இல்லாமை என்பதின் வெளிப்பாடு ஆகும்.

குழப்ப மடைய காரணமாக இருந்த புகார்கள்

ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குழப்ப மடைய பின்வரும் புகார்கள் காரணமாக இருந்தன.

  • சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் வராமல் போனது.
  • தேர்வு எண்கள் இல்லாதது,
  • பதிவு விவரங்களில் முரண்பாடு,
  • கடைசி நேரத்தில் மையங்கள் மாற்றப்பட்ட குளறுபடிகள்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் (TNPSC Group 2 & 2A Exam Postponed)

  • இந்தத் தேர்வே வாழ்க்கையின் திருப்பமாக நம்பி இருந்த தேர்வர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளானனர்.
  • பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல விதமான அரசியல் விமர்சனங்கள் எழுந்தன.
TNPSC Group 2 & 2A Exam Postponed - Gistakmedia

TNPSC புதிய தேர்வு தேதியையும் திட்டத்தையும் பின்னர் அறிவிக்கும்

தற்போது பிப்ரவரி 8, 2026 அன்று நடைபெற இருந்த தேர்வு ஆனது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதல் தாள் (குரூப் 2A) மற்றும் தமிழ் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்றும் இரண்டாம் தாள் (பிப்ரவரி 22 அல்லது 23) தேதி தொடர்ந்து நடைபெறலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இதுவரை புதிய தேதி அறிவிக்கப்படவில்லை. TNPSC புதிய தேர்வு தேதியையும் திட்டத்தையும் பின்னர் அறிவிக்கும்.

TNPSC தலைவர் பிரபாகர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், தேர்வு நடைபெற இருக்கும் நாளுக்கு 15 நாட்களுக்கு முன்பாக புதிய தேதியை அறிவிப்பதாக உறுதியளித்துள்ளார். ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் மாற்றம் இன்றி புதிய தேர்வுகளுக்கும் செல்லுபடியாகும் என்று பிரபாகர் கூறியுள்ளார். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ TNPSC இணையதளத்தை (tnpsc.gov.in) தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top