தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4 2025) ஆன்லைன் விண்ணப்பத்தை மே 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குரூப் 4 தேர்வானது ஜூலை 12-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வனக்காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், பீல்ட் சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 4 காலிப்பணியிடங்கள் (TNPSC Group 4 2025)
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி (Educational Qualification)
இந்த குரூப் 4 பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம் (Salary Process)
இந்த Group IV பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் (TNPSC Group 4 2025) விண்ணப்பதாரர்களுக்கு 8 வது ஊதியக்குழு (Pay Commission 8) அடிப்படையில் மாதம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை (Application Process)
இந்த குரூப் 4 பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மே 24-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் தேர்வுக்கான நுழைவு சீட்டு (Hall Ticket) ஜூன் மாதம் கடைசியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.