-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Tnpsc Group 4 Results : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான புதிய தகவல்
3,935 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை 12-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதியிருந்தனர். இதன் அடிப்படையில் பார்த்தால் 1 பதவிக்கு சுமார் 287 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் தேர்வானது மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் ரிசல்ட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர். தற்போது குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி (Tnpsc Group 4 Results) உள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அரசு பணிக்கு காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக டிஎன்பிஎஸ்சி இருந்து வருகிறது.
குரூப் 4 தேர்வு ரிசல்ட்
டிஎன்பிஎஸ்சி ஆண்டு தோறும் கால அட்டவணையை வெளியிட்டு அதற்கேற்றவாறு தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 3 உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானாலும், தேர்வர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பாக இருப்பது குரூப் 4 பணியிடங்கள் தான். ஏனென்றால் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மேலும் கொள்குறி வகையிலான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக வேலை என்பதால், குரூப் 4 தேர்வை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுகின்றனர்.
விடைக்குறிப்புகள் வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இது தேர்வர்களுக்கு பெரும் மன உளைச்சலையும் அதிருப்தியையும் கொடுத்தது. ஆனால் கடந்த ஆண்டு தேர்வு முடிந்து 3 மாதங்களுக்குள் (Tnpsc Group 4 Results) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தற்போதைய, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், குரூப் 4 தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, தற்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் வெளியாகும் (Tnpsc Group 4 Results)
டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியது போல 3 மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் சமயத்தில் தேர்வர்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!