TNPSC Jobs 2023 : 263 பணியிடங்கள் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு (TNPSC Jobs 2023) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை (TNPSC Jobs 2023) வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2023-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவி வேளாண்மை அலுவலர் :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : உதவி வேளாண்மை அலுவலர் (Assistant Agricultural Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு 84 காலிப்பணியிடங்கள் (TNPSC Jobs 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma In Agriculture படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
- சம்பளம் (Salary) : இந்த உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.20,600 – 75,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தோட்டக்கலை அலுவலர் :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticulture Officer) பணியிடங்களுக்கு 179 காலிப்பணியிடங்கள் (TNPSC Jobs 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma Course In Horticulture படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
- சம்பளம் (Salary) : உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.20,600 – 75,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Jobs 2023 - தேர்வு செய்யப்படும் முறை :
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :
உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் Agriculture (or) Horticulture என சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் மொத்தமாக 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவானது 3 மணி நேரம். இரண்டாம் தாள் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. இரண்டாம் தாள் பொது அறிவு இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவானது 3 மணி நேரம். - தேர்வு நடைபெறும் நாள் (Exam Date) : உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 07.02.2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) :
இந்த இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. - விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
5. மேலும் விவரங்களுக்கு : https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2023-Tam.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!