Tnstc Jobs 2025 : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1,589 காலிப்பணியிடங்கள்..உடனே அப்ளை பண்ணுங்க..!
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், திருநெல்வேலி மண்டலங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பட்டதாரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் (Tnstc Jobs 2025) வரவேற்கப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி, வயது வரம்பு, எந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Tnstc Jobs 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate Engineering Apprentices) பதவிக்கு 459 காலிப்பணியிடங்களும், பட்டயப் பயிற்சி (Technician Apprentices) பதவிக்கு 561 காலிப்பணியிடங்களும், பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices) பதவிக்கு 569 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 1,589 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2.கல்வி தகுதி (Educational Qualification)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொறியியல் பட்டதாரி பயிற்சி பதவிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்தவர்களும், பட்டயப் பயிற்சி பதவிக்கு டிப்ளமோ முடித்தவர்களும், பட்டதாரி பயிற்சி பதவிக்கு (Tnstc Jobs 2025) ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இந்த மூன்று பயிற்சி பணியிடங்களுக்கும் 19 வயது முதல் 29 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
4.சம்பளம் (Salary)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல் பட்டதாரி பயிற்சி மற்றும் பட்டதாரி பயிற்சி (Tnstc Jobs 2025) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.9,000/- ஊக்கத்தொகையும், பட்டயப் பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த மூன்று பயிற்சி பணியிடங்களுக்கும் டிகிரி, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டு பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இந்த மூன்று பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த மூன்று பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nats.education.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களை தேர்வு செய்து வரும் 18.10.2025 தேதி விண்ணப்பிக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!