Top 10 Stocks In January : ஜனவரி மாதத்தில் 80% வரை வருமானத்தை தந்த BSE500-இல் உள்ள 10 பங்குகள்
ஜனவரி மாதத்திற்கான GST வசூல் ஆனது 10.4%-ஆக அதிகரித்து ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு மிதமிஞ்சிய பொருளாதார செயல்பாட்டைக் குறிக்கிறது. இடைக்கால பட்ஜெட் 2024க்கு முன்னதாக ஜனவரி, 2024 மாதத்தில் 80% வரை (Top 10 Stocks In January) வருமானத்தை BSE500-இல் உள்ள 10 பங்குகள் பெற்றுள்ளன.
Top 10 Stocks In January - 2024 ஜனவரியில் குறிப்பிடத்தக்க சந்தை மதிப்பு அடைந்து லாபம் பெற்ற முதல் 10 பட்டியல் :
Indian Railway Finance Corporation (IRFC) : இந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகள் BSE-ஐ 500 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.99.3-ஆக இருந்த IRFC-யின் பங்கு விலை ஆனது ஜனவரி 31 அன்று 76%-ஆக அதிகரித்து ரூ.175 ஆக உயர்ந்துள்ளது. IRFC-யின் தற்போதைய சந்தை மூலதனம் (m-cap) ரூ.2.29 லட்சம் கோடி ஆகும்.
Rail Vikas Nigam : இந்த உள்கட்டமைப்பு பொதுத்துறை பங்குகள் ஆனது ஜனவரியில் 70%-ஆக அதிகரித்து ரூ.181.5ல் இருந்து ரூ.308 ஆக உயர்ந்துள்ளது. Rail Vikas Nigam-ன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.64,281 கோடி ஆகும்.
Infibeam Avenues : இந்த Fintech Sector பங்கு ஜனவரியில் 64% அதிகரித்து டிசம்பர் மாத இறுதியில் ரூ.21.4 லிருந்து ரூ.35.1 ஆக உயர்ந்துள்ளது. Infibeam Avenues-ன் சமீபத்திய m-cap ரூ.9,660 கோடி ஆகும்.
IRB Infrastructure Developers : இந்த உள்கட்டமைப்பு துறை IRB இன்ஃப்ரா, பங்கின் விலை ஒரு மாதத்தில் 59% அதிகரித்து ரூ.41.5 லிருந்து ரூ.66.1 ஆக உயர்ந்துள்ளது. IRB Infrastructure Developers-ன் m-cap ரூ.39,912 கோடி ஆகும்.
NBCC (India) : 58% ஆதாயங்களுடன் இந்தப் பட்டியலில் NBCC ஆனது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த ரியல் எஸ்டேட் துறை பங்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.81.6 லிருந்து அதிகரித்து ஜனவரி 31, 2024 அன்று ரூ.129.4 ஆக உயர்ந்துள்ளது. NBCC (India)-ன் m-cap ரூ.22,889 கோடி ஆகும்.
Oracle Financial Services Software (OFSS) : Oracle Financial Services Software (OFSS)-ன் பங்கு விலை 55% அதிகரித்து ரூ.6533 ஆக உயர்ந்துள்ளது. Oracle Financial Services Software (OFSS)-ன் m-cap ரூ 55,728 கோடி ஆகும்.
Alok Industries : Alok Industries-ன் பங்கு 52% அதிகரித்து ரூ.21.3ல் இருந்து ரூ.32.5 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய Alok Industries-ன் m-cap ரூ.15,695 கோடியாக உள்ளது.
Rites Ltd : Rites Ltd. 48% உயர்ந்துள்ளது.
Sobha Ltd : Sobha Ltd. 47% உயர்ந்துள்ளது.
SJVN Ltd : SJVN Ltd. 45% உயர்ந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட் 1 பிப்ரவரி 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 106.81 புள்ளிகள் அல்லது 0.15% சரிந்து 71,645.30 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 28.25 புள்ளிகள் அல்லது 0.13% சரிந்து 21,697.45 ஆகவும் முடிந்தது. உலகளாவிய சந்தைகள் ஆனது கலவையான போக்குகளைக் காட்டி உள்ளன. அமெரிக்க சந்தைகள் ஆனது புதன்கிழமை குறைந்துள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!