இந்தியாவில் பட்ஜெட் விலை 5G போன்களுக்கு (Top 5 Low Budget Smartphones) அதிக வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் (Top 5 Low Budget Smartphones) அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவில் சியோமி, ரியல்மி, மோட்டோ நிறுவனங்களின் பட்ஜெட் விலை 5ஜி போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் (Top 5 Low Budget Smartphones) பட்டியலை பார்க்கலாம்.
Top 5 Low Budget Smartphones :
Top 5 Low Budget Smartphones - Redmi 12 5G Smartphone :
ரெட்மி 12 5G ஸ்மார்ட்போன் ஆனது Amazon தளத்தில் ரூ.11,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் ஃபுல் HD Plus டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 50MB டூயல் ரியர் கேமரா, 8MB செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 5000 mAh பேட்டரி, 22.5 வாட்ஸ் சார்ஜிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
Top 5 Low Budget Smartphones - Samsung Galaxy M14 5G Smartphone :
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Amazon தளத்தில் ரூ.14,990 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் அமேசானில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும். 50MB ட்ரிபிள் ரியர் கேமரா, 13MB செல்பி கேமரா, சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு Os 13 இயங்குதளம், 6000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
Top 5 Low Budget Smartphones - Vivo T2X 5G Smartphone :
விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை Flipkart தளத்தில் ரூ.12,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த Vivo T2X 5G போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. கேமராவை பொறுத்தவரை 50MB டூயல் ரியர் கேமரா, 16MB செல்பி கேமரா, டைமன்சிட்டி 6020 சிப்செட் மற்றும் 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
Top 5 Low Budget Smartphones - Poco M6 5G Smartphone :
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை Flipkart தளத்தில் ரூ.11,999 என்ற மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். கேமராவை பொறுத்தவரை 50MB டூயல் ரியர் கேமரா, 8MB செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 5000 mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
Top 5 Low Budget Smartphones - Lava Plus 5G Smartphone :
லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை Amazon- ல் ரூ.11,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. 6.5-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு Os13 இயங்குதளம், 50MB ட்ரிபிள் ரியர் கேமரா, 8MB செல்பி கேமரா, டைமன்சிட்டி 700 சிப்செட் 5000 mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன்.