-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Top 5 Tips to How to Overcome Depression: மாற்றத்தை மகிழ்வுடன் ஏற்றால் ஏது மனச்சோர்வு?
“ஏற்றம் தரும் மாற்றம் ஏற்புடையது, ஏமாற்றம் தரும் மாற்றம் ஏய்ச்சுடையது”
மனச்சோர்வு (Depression) என்பது பொதுவானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 7% பெரியவர்களுக்கு மனச்சோர்வு (Depression) இருப்பதாகவும், பெரியவர்களில் 16% க்கும் அதிகமானவர்கள் – 6 பேரில் 1 வர் – தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் ஆவது மனச்சோர்வை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மாறி வரும் உலகில் சமீபகாலமாக மனச்சோர்வு (Depression) ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பலர் மனச்சோர்வின் நோயறிதலைப் பெறவில்லை மற்றும் நோய் அறிகுறிகளுக்கு சரியான மருத்துவ உதவியை நாடுவதில்லை. மனச்சோர்வின் அளவு சிறியது மற்றும் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.
மனச்சோர்வின் 7 அறிகுறிகள் (Depression Symptoms)
- அதிகமாக நேசிப்பவரின் பிரிவு, மரணம் மன அழுத்தத்தைத் (Depression) தரும்.
- அதிர்ச்சி, விவாகரத்து, ஆதரவின்மை தனிமை போன்ற கடினமான அனுபவங்கள் மன அழுத்தத்தைத் தூண்டும்.
- நாள்பட்ட உடல் வலி, மருத்துவ சிகிச்சை நிலைகள் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
- ஆல்கஹால் போன்ற போதைப்பொருள்களின் அதிக பயன்பாடும் மனச்சோர்வை (Depression) ஏற்படுத்தும் மேலும் அதை மோசமாக்கும்.
- குடும்ப வரலாறு மரபியல் மூலமாகவும் மனச்சோர்வு (Depression) ஏற்படலாம்.
- வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மனச்சோர்வின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
- மூளை வேதியியல் – மூளையில் உள்ள ரசாயன பொருள்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள்
முழுமையான புரிதலின் அடிப்படையில் உடல்நலப் பாதுகாப்பு வல்லுநர்கள் (The Psychiaritst) மனச்சோர்வைக் கண்டறிகின்றனர். மனச்சோர்வு (Depression) என்பது குணப்படுத்தக்கூடியது.
Top 5 Tips to How to Overcome Depression
- தங்களுக்கு பிடித்தமான சுற்றுலா தலங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல்,….. அல்லது கோவில் , குளங்கள் உள்ள புண்ணிய இடங்களுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.
- மன ஆறுதல்கள் தரும் உறவினர் இல்லங்களில் தங்கி மனமாற்றத்தை பெறலாம்.
- தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகள் மீது அதிகம் கவன செலுத்தி அவைகளின் Videos, News பார்க்கலாம் மற்றும் விளையாடலாம்.
- தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் (i.e., படம் பார்ப்பது, பாட்டு கேட்பது , தொலைய பேசியில் பேசுவது, …..etc ) அதிகம் கவனம் செலுத்தி மனதின் எண்ண ஓட்டங்களை சந்தோஷப் படுத்தலாம்.
- தங்களுக்கு பிடித்தமான கலைகளை (i.e., ஓவியம் வரைவது, வாத்தியங்கள் இசைப்பது, சமையல் செய்வது ……) பயில்வது மூலம் மனமாற்றம் காணலாம். (i.e., Attending training classes for improving the hidden skills).
Counselling is The Best Medicine for Depression
மனச்சோர்வு (Depression) என்பது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் என்ற பொதுவான கணக்கு ஒரு பக்கம் இருந்தாலும், எவரையும் மனச்சோர்வு தாக்கலாம். அதற்கு சரியான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
மனச்சோர்வு (Depression) ஒரு தொடர்ச்சியான சோக உணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் நினைவுகள், தூக்கம், சாப்பிடும் உணவின் அளவு ஆகியவற்றை பாதிக்கிறது. பொதுவாக பேச்சு சிகிச்சை நல்லது. THE COUNSELLING IS THE BEST MEDICINE. பேச்சு சிகிச்சை “மாற்றம் ஒன்றே மாறாதது” பொதுவாக நல்லது.
“அவரர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள் – முதல் மூச்சு முதல் இன்று வரை”
மண்ணில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை மொழியில் , நடையில் , உடையில், உணர்வில் நம்மிடம் எத்தனை எத்தனை மாற்றங்கள். நம் உறவுகளில் காதலனாக, காதலியாக,கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, பேரனாக, பேத்தியாக, தாத்தாவாக, பாட்டியாக எத்தனை எத்தனை மாற்றங்கள். வந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம் பயணிக்கும் வாழ்க்கை பாதையில் எத்தனை எத்தனை மாற்றங்கள். பாசத்தில் , நேசத்தில், பள்ளியில், படிப்பில் , நட்பில், தொழிலில் , தொழில் செய்யும் இடத்தில், பதவியில், நம்பிக்கையில் , நாணயத்தில் , நடத்தையில்… தானாக வந்த மாற்றங்கள் எத்தனை எத்தனை. விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எத்தனை எத்தனை. ஏற்றம் தந்த மாற்றங்கள் எத்தனை எத்தனை, ஏமாற்றம் தந்து தடுமாற வைத்த மாற்றங்கள் எத்தனை எத்தனை.
“சப்தம் இல்லாத தனிமை கேட்ட” அமர்க்களம் பட அஜித் போலோ எல்லோருக்கும் எல்லா விரும்பிய மாற்றங்களும் அமையுமா???????… என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ?. ஆனாலும் “மாற்றம் என்பது மானுடனுக்கு” என்பது என்றும் மாறாதது.
“ஏற்றம் தரும் மாற்றங்களை விரும்பி ஏற்போம், ஏமாற்றம் தரும் மாற்றங்களை ஏற்றதாக மாற்றுவோம்”
உன்னை சுற்றும் உலகத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்
அரசியலில் அனுதினம் ஏற்படும் கட்சி மாற்றங்கள் எத்தனை எத்தனை, பதவி மாற்றங்கள் எத்தனை எத்தனை, கொள்கை மாற்றங்கள் எத்தனை எத்தனை. மக்கள் கோரிக்கைகளில் எத்தனை எத்தனை மாற்றங்கள். மத மாற்றங்கள் எத்தனை எத்தனை. தெய்வீக பணிகளில் எத்தனை எத்தனை மாற்றங்கள். உண்ணும் உணவில்”பீசா , பர்கர் முதல் நொடியில் ரெடி” வரை எத்தனை எத்தனை மாற்றங்கள்.
பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பிற விழாக்கள் கொண்டாடும் பழக்க வழக்கங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள். பாதைகளில் “Ring road, Bridges, Subways…” எத்தனை எத்தனை மாற்றங்கள். பயணிக்கும் வாகனங்களில் “ Metro Trains, Electric Trains, Two Wheeler, Four Wheelers, Buses, …..” எத்தனை எத்தனை மாற்றங்கள். பொழுது போக்குகளில் “ Malls, Snow world, Thunder world,..” எத்தனை எத்தனை மாற்றங்கள்.
ஊடகங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள். தொலை தொடர்பு சாதனங்களில் “ Landline Telephone, Cellphone, Laptop, Video conferencing…”எத்தனை எத்தனை மாற்றங்கள். விண்ணில் விண்வெளி பயணங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள். இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்கள்…?????
எண்ணிப்பார் உன்னில் எத்தனை எத்தனை மாற்றங்கள் , என்னில் எத்தனை எத்தனை மாற்றங்கள், உலகத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்.








