ஒரே நேரத்தில் அழகும் ஆபத்தும் பிரதிபலிக்கும் நயன்தாராவின் ‘டாக்ஸிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிமிடத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக கவனத்தை (Toxic Movie Update) ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் கீது மோகன் தாஸ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அன்று உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஈத், உகாதி மற்றும் குடி பத்வா போன்ற பண்டிகைகள் இடம் பெறும் வார இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்ஸிக்’
பிரபல நடிகர் மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்ஸிக்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் யாஷ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா மற்றும் ருக்மிணி வசந்த் உட்பட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தேசிய விருது வென்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைப்பாளராகவும் மற்றும் உஜ்வால் குல்கர்னி படத்தொகுப்பாளராகவும் இந்தப் படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படம் நடிகர் யாஷ் அவர்களுக்கு 19-வது திரைப்படமாக அமைந்துள்ளது.
நடிகர் கீது மோகன் தாஸ் ஒரு பிரபல இயக்குநர்
பிரபல நடிகர் கீது மோகன் தாஸ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பு மலையாள சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர். இவர் லையர்ஸ் டைஸ் என்ற தனது முதல் படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் ஆனது (Toxic Movie Update) திரையிடப்பட்டுள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவைப் பெற்றுள்ளது. இவர் தனது அடுத்த படமான ‘டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இது ஒரு “மரபை மீறும் ஒரு கதை என்றும் நமக்குள் உறுதியாக குழப்பத்தைத் தூண்டும் கதை என்றும் கூறியுள்ளார்.
மாறுபட்ட ‘கங்கா’ கதாபாத்திரத்தில் நயன்தாரா (Toxic Movie Update)
மாறுபட்ட ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் இந்த ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா தோன்றுகிறார். கையில் துப்பாக்கி ஏந்தி அச்சமற்ற துணிச்சலுடனும் மற்றும் அளவான அமைதியுடனும் நயன்தாரா திரையை ஆக்கிரமிக்க வரவிருக்கிறார். இதுவரை யாரும் வெளிப்படுத்தாத வகையில் நயன்தாரா கங்காவாக இந்த ‘டாக்ஸிக்’ படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
பெரிய திரைக்கு திரும்பும் ராக்கிங் ஸ்டார் யாஷ்
ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது கேஜிஎஃப்: அத்தியாயம் 2 திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மறுவரையறை செய்தவர். இந்த ‘டாக்ஸிக்’ படத்தின் மூலம் மீண்டும் முத்திரையை பதிக்க வருகிறார். இவரது 59 வினாடிகள் கொண்ட டீசர் பார்வையாளர்களை (Toxic Movie Update) எளிதில் ஒரு அற்புதமான நிகழ்வின் பக்கம் இழுத்து செல்கிறது. அவரது நீண்ட கூந்தல் மற்றும் தாடியுடன் கூடிய தோற்றம் ஆனது முதல் பார்வையிலேயே, அவரை கிளப்புகள், பார்ட்டிகள் மற்றும் பெண்களை விரும்பும் ஒரு பாதாள உலக கேங்ஸ்டராக சித்தரிப்பதாக உள்ளது.