கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள போதைப்பொருள் கும்பலை மையப்படுத்திய கதை கொண்ட “டாக்ஸிக்” படத்தின் (Toxic Teaser) டீசர் பிப்ரவரி 20 அன்று வெளியாகி உள்ளது. இந்த “டாக்ஸிக்” படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
வியூஸ் சாதனை படைக்கும் டாக்ஸிக் டீசர்
“டாக்ஸிக்” படத்தின் டீசர் ஆனது பிரம்மாண்டமான வியூஸ் சாதனை படைத்துள்ளது. பிப்ரவரி 20 அன்று காலை 9:35 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் (Toxic Teaser) வெளியானது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. யூடியூபில் 48.70 மில்லியன் வியூஸ், இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் வியூஸ், ட்விட்டர்/ஃபேஸ்புக் மூலம் 23 மில்லியன் வியூஸ் என மொத்தம் 300 மில்லியன் வியூஸைக் கடந்து உலகளவில் சாதனை படைத்து வருகின்றது. இந்த 300 மில்லியன் வியூஸ் எண்ணிக்கை ஆனது இந்திய திரைப்பட டீசர்களின் வியூஸ் எண்ணிக்கையில் ஒரு புதிய சாதனையாகும். ரசிகர்கள் இந்த டாக்ஸிக் படத்தின் டீசர் ஆனது கேஜிஎஃப் படத்தின் டீசரை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளதாக பாராட்டி வருகின்றனர். மேலும் ஜனநாயகன், பராசக்தி டிரெய்லர்களின் வியூஸ்களை மிஞ்சிய இந்த டாக்ஸிக் படத்தின் டிரெய்லர்களின் வியூஸ்கள் ஆனது யாஷின் ராக்கிங் ஸ்டார் இமேஜை வலிமையாக உறுதிப்படுத்தி உள்ளது.
டாக்ஸிக் டீசரில் வெடித்த சிதறல்கள் (Toxic Teaser)
ஸ்டைலிஷ் ஆக்ஷன் ஹீரோவாக ராயா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக தோன்றுகிறார் யாஷ். கம்பீரமான பார்வை, அதிரடி அசைவுகள் யாஷின் பன்முகத்தன்மையை காட்டுகின்றன. அதிகாரமும் வன்முறையும் நிறைந்த மாஃபியா உலகின் சக்திவாய்ந்த ராஜாவாக மற்றும் விலையுயர்ந்த காரில் வந்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அதிவேக ஆக்ஷன் அரசனாக யாஷ் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறார்.
டாக்ஸிக் ஆக்ஷன் த்ரில்லர் படம்
இத்திரைப்படம் 1940 முதல் 1970 வரையிலான காலகட்ட படமாகவும் மற்றும் கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா (Toxic Teaser) கும்பல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.
டாக்ஸிக் பட வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு
உலகளவில் உள்ள திரையரங்குகளில் டாக்ஸிக் படம் மார்ச் 19, 2026 அன்று பல மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உகாதி, குடி பட்வா பண்டிகை கோலாலங்களுக்கு நடுவில் வரும் மகிழ்ச்சி வெளியீடாக அமையும். மேலும் இது பள்ளி கல்லூரிகளின் விடுமுறையை ஒட்டிய நிகழ்வாக சிறந்த வரவேற்பை பெறும்.