Gistak Media

Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்தியாவின் சுற்றுலா தளங்களில் ஒன்றான காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீவிரவாத (Tribute To Soldiers Of India) நிகழ்வு நடந்தது. அந்த பஹல்காம் இடத்திற்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் அவர்களின் குடும்பத்தினரின் கண் முன்பு ஈவு இரக்கம் இன்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர். இதில் மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தானின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவில் வான்வழி தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் இந்திய ராணுவம் அதை அனைத்தையும் முறியடித்தது.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் என பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி உள்ளனர். பொதுமக்கள் வாழ்வாதாரம் இந்த போரால் பாதிக்கப்பட கூடாது என்றும், அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட கூடாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இளையராஜா எடுத்த சிறப்பான முடிவு (Tribute To Soldiers Of India)

இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் “நான் இந்த 2025 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து அதற்கு ‘வேலியன்ட்’ என்று பெயரிட்டேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாத்து வரும் இந்திய நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீர (Tribute To Soldiers Of India) முயற்சியை பாராட்டுகிறேன். நான் எனது ஒரு மாத சம்பளத்தையும் மற்றும் இசை நிகழ்ச்சியின் கட்டணத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு எனது சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top