Turbo Movie Review: டர்போ திரைப்படத்தின் திரை விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மம்மூட்டி நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தின் (Turbo Movie Review) விமர்சனத்தை காணலாம்.
டர்போ :
மம்மூட்டி நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள டர்போ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். அஞ்சனா ஜெயபிரகாஷ், திலிஷ் போத்தன், சபரீஷ் வர்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரேமலு, பிரமயுகம், மஞ்சும்மாள் பாய்ஸ் என மலையாளப் படங்கள் ஒருபுறம் வெளியாகும் நிலையில், மறுபுறம் சில கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறது மலையாள சினிமா துறை. ஸ்லோ மோஷன் ஷாட்கள், அதே வழக்கமான கதை, பாடல்கள் என, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாம் பார்த்து அலுத்துப்போன கதைகளை மீண்டும் தங்கள் பங்கிற்கு கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளியான RDX படத்தை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இந்த ஆண்டு அப்படியான ஒரு படமாக வெளியாகியுள்ளது டர்போ.
டர்போ படத்தின் மையக்கருத்து :
நாயகன் டர்போ ஜோஸ் (மம்மூட்டி) சின்ன சின்ன சண்டைகள் செய்து தனது ஊரில் சுற்றித் திரிகிறார். ஜோஸ் கட்டுப்படும் ஒரே நபர் அவரது அம்மா. மறுபுறம், சென்னையில், இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனைகளைச் செய்து, தமிழகத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் வில்லன் ராஜ் பி ஷெட்டி. எல்லா வில்லன்களையும் போலவே, இந்த வில்லனும் தனது எதிரிகளை இரக்கமின்றி கொள்ளக்கூடியவர். தனது நண்பரின் காதலை சேர்த்து வைக்க நினைக்கும் ஜோஸ் இந்த கொள்ளை கும்பலிடம் சிக்குகிறார். அவர்களிடமிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் ஜோஸ் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதி கதையாகும்.
படத்தின் திரைவிமர்சனம் (Turbo Movie Review)
சண்டையில் ஈடுபடும் சராசரியான ஹீரோ, ஒரு கொடூரமான கொலைகார வில்லன். நட்பு, அம்மா சென்டிமென்ட் இவற்றுடன் சேர்த்து அதிக ஆக்ஷன் காட்சிகள் தான் டர்போ. டெம்ப்ளேட் கதையில் முடிந்தவரை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்வையாளர்களை 3 மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். ஆக்ஷன் என்பது சாதாரண ஆக்ஷன் அல்ல, லோக்கல் போலீஸ்காரர்கள் தொடங்கி வாள் ஏந்திய சாமுராய், மெஷின் துப்பாக்கி ஏந்திய கும்பல் வரை எல்லாவிதமான வில்லன்களும் படத்தில் இருக்கிறார்கள்.
மம்மூட்டி எல்லோரையும் கையால் அடித்து துவம்சம் செய்கிறார். இது கொஞ்சம் ஓவராக இல்லையா என்று கேட்க வைக்கிறது. நடிப்பை பொறுத்தவரையில் அம்மாவின் பேச்சிற்கு கட்டுப்படும் விவரம் தெரியாத ஒரு அப்பாவியாக மம்மூட்டி சிறப்பாக நடித்துள்ளார். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் சண்டை போடுவதுதான். வில்லனாக வரும் ராஜ் பி ஷெட்டி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் கலந்து பேசும் கூல் லுக்கில் குங்ஃபூ தெரிந்த வில்லன் மிரட்டியுள்ளார். கதாநாயகியாக அஞ்சனா ஜெயபிரகாஷ் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் யூகிக்கக்கூடிய காட்சிகளை சகிக்க வைக்கிறது. படத்தின் நாயகனின் அறிமுகத்தில் இருந்தே இது என்ன மாதிரியான படம் என்பதை நாம் யூகிக்க முடியும். இருந்தாலும், மம்மூட்டிக்காக படம் பார்க்க விரும்புபவர்கள் டர்போ படத்தை பார்க்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!